இது ஒரு சோக்கு!!!

இது ஒரு சோக்கு.அதாவது நகைச்சுவை. மூன்று நண்பர்கள் ஒரு ஆயிரம் மாடி குடியிருப்பில் வசித்து வந்தார்கள்.அவர்களது வீடு 910வது தளத்தில் இருந்தது.லிப்ட் வசதி இருப்பதால் அவர்களுக்கு ஒன்றும் சிரமமாக இல்லை. ஒரு நாள் மூவரும் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தனர்.லிப்ட் பொத்தானை அழுத்திப் பார்த்தால் அது இயங்கவில்லை.அவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.வேறு வழியேயில்லை, நடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்.அது என்னவென்றால் இத்தனை மாடிகளையும் கடந்து செல்லும் களைப்பு தெரியாமல் இருக்க ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல வேண்டும் என்பதாகும்.முதலில் ஒருவன் ஆரம்பித்தான்.அது மிகவும் சுவாரசியமான கதையாய் இருந்தது.அவன் கதையை முடிக்கும் போது 400 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.அடுத்து இரண்டாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அது முதலாமவன் சொன்னதைவிட சுவாரசியமாக இருந்தது.கதையை முடிக்கும் போது 850 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.இப்பொழுது மூன்றாமவன் முறை.இருவரும் அவன் முகத்தை பார்த்தார்கள்.அவன் சொன்னான்." நீங்கள் இருவரும் நல்ல கதை சொன்னீர்கள்.முதலாமவன் திகில் கதையும்,இரண்டாமவன் சிரிப்பு கதையும் சொன்னீர்கள். நான் இப்பொழுது சோகக் கதை சொல்ல போகிறேன்" என்றான்.சரி சொல் என்றதும் அவன் சொன்னான்,"வீட்டு சாவி கீழே காரிலேயே இருக்கிறது.அதை எடுக்க மறந்துவிட்டோம்".
கதை இத்துடன் முடிந்ததா?

இல்லை. தொடர்ந்து படியுங்கள்.
மீண்டும் 850 மாடிகளை கடக்க வேண்டுமே? அதனால் திரும்பவும் அதே யோசனையை கடைபிடித்தார்கள்.முதலாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அவன் கதையை முடிக்கும் போது 400 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.வழக்கம்போல் நல்ல கதை சொன்னான்.அடுத்து இரண்டாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அவன் கதையை முடிக்கும் போது 10வது மாடியில் அவர்கள் நின்றிருந்தார்கள்.இப்பொழுது மூன்றாமவன் முறை. அவன் சொனனான், "ஆகா! இருவரும் என்ன அழகான கதை சொன்னீர்கள்.வழக்கம்போல் இந்தமுறையும் நான் ஒரு சோகக்கதை சொல்ல போகிறேன்" என்றான். மற்ற இருவரும் பயந்துபோய் அவன் முகத்தை பார்த்தார்கள்.அவன் சொன்னான், " நாம்தான் ஒரு மாற்று சாவியை எதிர்வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறோமே.இந்த சாவிக்காக இவ்வளவு தூரம் வரத் தேவையே இல்லையே ".இதைக் கேட்ட மற்ற இருவரும் நொந்து நூலானார்கள்.
கதை இத்துடன் முடிந்ததா?

இல்லை. தொடர்ந்து படியுங்கள்.
பிறகென்ன வழக்கம்போல் அதே ஒப்பந்தம்.முதலாமவன் இந்தமுறை மிகப் பிரமாதமான கதையை சொன்னான்.அவன் முடிக்கையில் 400 மாடி முடிந்திருந்தது. அடுத்து இரண்டாமவன் ஆரம்பித்தான். அவனும் நல்ல ஒரு கதையை சொல்லி முடித்தான்.800 மாடி முடிந்திருந்தது.மூன்றாமவன் இந்தமுறை ஓவென்று அழத் தொடங்கினான். மற்ற இருவரும் பதறி "ஏனடா அழுகிறாய்? சொல்லிவிட்டு அழுதுதொலை" என்றார்கள். அவன் சொன்னான்" கடவுள் ஏன் என்னை இப்படி சோதிக்கிறார் என்று தெரியவில்லை " என்றான். அவர்கள், "ஏன், என்ன ஆயிற்று " என்று கேட்டார்கள். அதற்கு அவன்," தொடர்ந்து என்னைமட்டும் சோகக்கதையாக சொல்லவைக்கிறாரே" என்றான்.இதைக்கேட்ட மற்ற இருவரும் பயந்து போனார்கள்."மீண்டும் சோகக்கதையா?சீக்கிரம் சொல்" என்றார்கள். அவன் சொன்னான்," நண்பர்களே, நாம் இவ்வளவு நேரமும் ஏறி,இறங்கிக் கொண்டு இருப்பது நமது குடியிருப்பில் அல்ல, பக்கத்து குடியிருப்பில்"

Comments

உங்களுடைய இது ஒரு சோக்கு என்ற "மாடிக் குடியிருப்பில் மூன்று நண்பர்களும் அவர்தம் கதைகளும்" நன்றாக உள்ளது. ரசித்துச் சிரித்தேன்.

நன்றி.
Unknown said…
Very funny story. Keep posting humorous stories like this.

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

இமயத்து ஆசான்கள்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!