Posts

Showing posts from June 3, 2007

மைனாவும், நைனாவும்

சிறுவன் ராமு ஒரு நாள் ஒரு மைனாவை வாங்கி வந்தான்.அதை மிகவும் பாசமாக வளர்த்து வந்தான்.மதியம் உணவு இடைவேளையின்போது வீட்டிற்கு ஓடி வந்து மைனாவை பார்த்துவிட்டு செல்வான்.ஒரு நாள் அவன் பள்ளிக்கு சென்றபிறகு அவன் தாய் மைனா கூண்டை சுத்தம் செய்ய திறந்தாள்.அப்பொழுது அது வெளியே வந்து கீழே விழுந்துவிட்டது.இதில் அதன் ஒருகால் உடைந்துவிட்டது.இதைப் பார்த்த அவள் மிகவும் கவலை கொண்டாள்.ராமுவிற்கு என்ன சமாதானம் செய்வது என்று யோசித்தாள்.அதற்குள் மதியம் வந்துவிட்ட ராமு, "அம்மா!பசிக்கிது சாப்பாடு போடுமா" என்றான்.அவன் தாய் மெதுவாக,"ராமு, மைனவுக்கு கால் உடைஞ்சிருச்சு" என்றாள்.உடனே ராமு,"அம்மா! நானே பயங்கர பசில வந்துருக்கேன், சீக்கிரம் சோறு போடுமா" என்றான்.அவன் தாய்க்கு ஒரே ஆச்சரியம், அதே சமயம் நிம்மதி.பிறகு ராமு பள்ளிக்கு திரும்பிவிட்டான்.மீண்டும் மாலை வீட்டிற்கு வந்தவன் மைனாவை பார்த்தான்.அதன் கால் உடைந்திருப்பதை பார்த்த அவன் ஓவென்று அழ ஆரம்பித்தான்.அவன் தாய் ஓடி வந்து "ஏன்டா அழற" என்றால்.ராமு, " அம்மா மைனாவிற்கு கால் உடைந்து இருக்கு. நீ ஏன் என்கிட்ட சொல்லல?" என்

லிட்டில் மேரி சோக்கு

லிட்டில் மேரி ஜோக்குகள் அமெரிக்காவில் பிரபலம்(லிட்டில் ஜானி ஜோக்கும் தான்.ஆனால் பெரும்பாலான லிட்டில் ஜானி ஜோக்குகள் 'ஏ' ரகத்தை சார்ந்தவை).லிட்டில் மேரியை ஒரு அப்பாவி சிறுமியாக சித்தரித்திருப்பார்கள்.அதில் ஒரு சோக்கு இங்கே: லிட்டில் மேரி தனது தோட்டத்தில் அழுதுகொண்டு எதையோ குழியில் தள்ளி புதைத்து கொண்டு இருந்தாள்.அவளது அண்டை வீட்டுக்காரர் இதைபார்த்து,"லிட்டில் மேரி! எதற்காக அழுது கொண்டு இருக்கிறாய்?" என்று கேட்டார். லிட்டில் மேரி சொன்னாள்,"எனது செல்ல மீன் இறந்துவிட்டது. அதை புதைத்துக் கொண்டு இருக்கிறேன்".பக்கத்து வீட்டுக்காரர் உடனே," அடடா! அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் ஒரு மீனிற்கு இந்த குழி மிகவும் பெரியது" என்றார்.அதற்கு லிட்டில் மேரி சொன்னாள்," மீன் என்னவோ சின்னதுதான்.ஆனால் அது இருப்பது உங்கள் பூனையின் வயிற்றுக்குள்ளே".