காசி யாத்திரை
எனது மற்றும் எனது நண்பர்களின் நீண்ட நாள் கனவு சென்ற மார்ச் மாதத்தில் நனவாகியது. அதுதான் காசி பிரயாணம். சில வருடங்களாக நாங்கள் அதைப்பற்றி பேசி வந்தாலும் அதற்கு வேளை வந்தது இப்போதுதான்( விஸ்வநாதர் அருள் வேண்டுமல்லவா அந்த புண்ய மண்ணை மிதிப்பதற்கு?) பிப்ரவரி மாத இறுதியில் எங்கள் காசி பிரயாண வேட்கை தீவிரமாகி விமான பயணத்திற்கு முன்பதிவு செய்ய முயன்றோம். விமான கட்டணம் மட்டுமே ஒரு லக்ஷம் ரூபாய் அருகில் வந்ததால் திட்டத்தை கைவிட்டோம். பிறகு, நான் சென்ற வருடம் ஷீர்டி அழைத்துச்சென்ற டூர் நிறுவனத்திடம் பேசினேன. அவர்கள் சந்தோசமாக ஒப்பு கொண்டார்கள். பயண கட்டணம் ஒருவருக்கு இருபத்தி இரண்டாயிரம் என்று முடிவாகியது.மொத்தம் பனிரெண்டு பேர் திட்டமிட்டபடி மார்ச் 14 கிளம்பி 17 அன்று சென்னை வந்து சேர்ந்தோம். 14 மார்ச்: காலை 9 மணிக்கு கிளம்பி மதியம் 12 மணிக்கு காசி விமான நிலையம் அடைந்தோம். அங்கிருந்து காரில் காசியை அடைய ஒரு மணி நேரம் ஆனது. தங்கும் விடுதியில் சிறிது நேரம் இளைப்பாறி உணவு உண்டு மாலை சாரநாத் சென்று அங்குள்ள புத்த மத அருங்காட்சியகம் கண்டு ரசித்தோம் இரவு, நண்பர்கள் கங்கை ஆரத்தி பார்க்க சென்ற...