Posts

Showing posts from July 18, 2010

இது அப்ரைசல் நேரம்!!!

               அப்ரைசல் என்கிற சம்பள உயர்வு,  பணியாளர்களை  படாதபாடு  படுத்துகிறது. வருடத்திற்கு ஒருமுறை  சம்பள உயர்வளிக்கும் நிறுவனம் என்றால் தப்பித்தோம். சில  நிறுவனங்களில்  இரண்டுமுறை  உயர்த்துவார்கள். அந்த நிறுவன பணியாளர் பாடு திண்டாட்டம்தான். ஏன் என்றால் இந்த அப்ரைசல் என்பது சாதாரண விஷயம் இல்லை. சென்ற வருடம் நீ என்ன சாதித்து கிழித்தாய் என்பதை நாசுக்கான வார்த்தைகளில் கேட்பார்கள்.நாம் அதற்கு பக்கம், பக்கமாக விளக்கம் அளிக்க வேண்டும். நாம் ஒன்றும் ஒருப்படியாக கிழிக்காவிட்டாலும் சும்மா அள்ளி விடவேண்டும் .அப்போதுதான் எட்டு சதவீதமோ, பத்து சதவீதமோ உயர்வு இருக்கும். இல்லையென்றால் "உனக்கு இப்போது கொடுப்பதே ஜாஸ்தி, கொய்யால! கொடுக்கறது வாங்கிட்டு கம்னு கெட" என்று சொல்லிவிடுவார்கள்("நாசுக்கான வார்த்தைகளில்"). எனவே சனி, ஞாயிறு கிழமைகளில் கூட ரூம் போட்டு யோசித்தாவது எதையாவது  அந்த படிவத்தில்(எல்லாமே online தான்)  நிரப்ப வேண்டும்.                இந்த வருடம் நானும் அதை சாதித்தேன், இதை சாதித்தேன் என்று  நிரப்பியும்   ஒன்றும் ஒருப்படியாக தேறவில்லை. இதில் கால கொடுமை என

ஒருப்படியாக கழிந்த சென்ற வாரம்!!!

சென்ற வாரத்தில் நான் செய்த சில வேலைகள் எனக்கு என மனைவியிடம் நல்ல பெயர் வாங்கித் தந்தன.(உஷ்ஷ்! இப்பவே கண்ண கட்டுதே). வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜூலை பதினைந்து கடைசி தேதி என்று எங்கள் குடியிருப்பின் தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டியிருந்தார்கள். ஆஹா! நமக்கும் ஒரு விடிவு காலம் வந்துவிட்டது. ஒரு உருப்படியான முகவரி சான்று கிடைத்துவிடும் என்று எனக்கு சந்தோசம்.அதற்கான விண்ணப்பங்கள் எங்கள் குடியிருப்பின் காவலாளியிடம் இருப்பதையும் தகவல் பலகை சொல்லியது. குறைந்த விண்ணப்பங்களே இருப்பதால் உங்கள் பிரதிக்கு முந்துங்கள் என்று உப தகவலை குடியிருப்பின் நலச்சங்க தலைவர் பின்குறிப்பாக எழுதியிருந்தார்.அதனால் உடனே காவலாளியை தேடி, ஓடி கண்டுபிடித்தேன். இரண்டு விண்ணப்பங்களை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்ட பிறகு தான் எனக்கு நிம்மதி வந்தது. அவரிடமே அதை பூர்த்தி செய்து எங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது அவர் இரண்டு, மூன்று பேருந்து நிறுத்தங்கள் தள்ளி ஒரு சந்தில் இருக்கும் பள்ளியில் கொடுக்க வேண்டும் என்றார்.

ஆன்மிக சொற்பொழிவு!!!

கடும் பணிச் சுமையின் காரணமாக பதிவுகள் இடுவதில் ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.இன்று எப்படியாது ஒரு பதிவாவது இட வேண்டும் என்று எல்லாம் வல்ல வயலூர் முருகப் பெருமானை வேண்டி தொடங்குகிறேன்.இன்று வாரியார் சுவாமிகளின், வள்ளலார் பற்றிய சொற்பொழிவை கணினியில் கேட்டதன் விளைவு இது. வாரியார் சுவாமிகளுக்கு நிகர் அவர் தான். என்ன ஒரு சரளமான தமிழ், என்ன ஒரு ஞாபக சக்தி!!! "இன்று காலை என்ன சாப்பிட்டாய் ?" என்று யாராவது கேட்டால் நான் ஒரு ஐந்து நிமிடமாவது யோசிப்பேன். சுவாமிகள் எந்த காலத்திலோ படித்த, கேட்ட பாடல்களை சுருதி பிசகாமல், வார்த்தை மாறாமல் அழகாக பாடுகிறார். இடையிடையே மெல்லிய நகைச்சுவை வேறு. உபன்யாசம் செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதி சொல்ல வந்ததை சுருக்கமாக, தெளிவாக, சுவையாக சொல்லும் கலை. இவை அனைத்தும் சுவாமிகளுக்கு உண்டு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனது பள்ளி நாட்களில் புலவர் கீரன் அவர்களது சொற்பொழிவுகளை ஒலி நாடாவில் கேட்டிருக்கிறேன்.அவருடைய பேச்சும் மிக அருமையாக இருக்கும். அவருடைய பெரிய பலம் வெண்கல மணி ப