Posts

Showing posts from March 2, 2008

போதகரும்,காரோட்டியும்

போதகர் ஒருவர் இறந்து சொர்க்கம் சென்றார்.அங்கே சொர்க்கத்திற்குள் நுழையும் வாயிலின் அருகே நீண்ட வரிசை இருந்தது.அவரும் அந்த வரிசையில் நின்றார்.அந்த வரிசையில் அவருக்கு முன்னர் ஜீன்ஸ் பேண்டும்,குளிர் கண்ணாடியும் அணிந்த ஒரு இளைஞன் நின்றிருந்தான்.சொர்க்கத்தின் காவலாளி அந்த இளைஞனிடம், " நீ யார் என்பதை என்னிடம் சொல்.அதைவைத்துதான் உன்னை உள்ளே அனுப்புவதா,இல்லையா என்று நான் முடிவு செய்ய வேண்டும்" என்றான். அதற்கு அந்த இளைஞன், "எனது பெயர் ஷாங். நான் பூமியில் வாடகைக்கார் ஓட்டியாக இருந்தேன்" என்றான்.உடனே தனது கையிலிருந்த பட்டியலில் அதை சரி பார்த்த காவலாளி அந்த இளைஞனிடம் " இந்த தங்க அங்கியை எடுத்துக் கொண்டு நீ சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இளைஞனும் மகிழ்ச்சியோடு உள்ளே செல்கிறான்.அடுத்து போதகரின் முறை.அவரிடம் அவரைப் பற்றி சொல்லுமாறு காவலாளி கேட்க அவரும் தனது பெயரையும், தான் பூமியில் வருடக்கணக்காக மக்களுக்கு கடவுள் பற்றிய விஷயங்களை போதித்து வந்ததாகவும் சொல்கிறார்.அதைக் கேட்டு தனது பட்டியலில் சரி பார்க்கும் காவலாளி அவரிடம், "இந்த பருத்தி அங்கியை எடுத்துக்கொண்டு

ஒரு ஜென் கதை

ஜென் துறவி ஒருவர் அழகான மலையடிவாரத்தில் வசித்து வந்தார்.ஒரு நாள் மாலை அவர் வீட்டில் இல்லாதபோது திருடன் ஒருவன் அவருடைய எளிய வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சிக்கிறான்.ஆனால் அங்கு திருடுவதற்கு ஒன்றும் இல்லை.இதற்கிடையில் ஜென் துறவி வீட்டிற்கு திரும்புகிறார்.வீட்டில் திருடன் இருப்பதையும்,திருட ஒன்றும் இல்லாததால் அவன் ஏமாந்து நிற்பதையும் பார்க்கிறார்.உடனே அவர், "மகனே! நீ வெகு தூரத்தில் இருந்து என்னைத்தேடி வந்துள்ளாய்.உன்னை வெறுங்கையுடன் அனுப்புவது தவறு.அதனால் தயவுசெய்து எனது அன்பளிப்பாக இந்த உடையை எடுத்துக்கொள்" என்று சொல்லி தான் அணிந்திருந்த உடையை கழட்டி அவனிடம் கொடுக்கிறார்.திருடன் சற்று திகைத்தாலும் பிறகு சுதாரித்து அந்த துணியை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறான்.அவன் போனபிறகு நிர்வாணமாக அமர்ந்து வெளியே நிலவைப் பார்க்கும் துறவி எண்ணுகிறார், "பாவம் அவன்! அவனுக்கு பேசாமல் இந்த நிலவைக் கொடுத்து அனுப்பியிருக்கலாம்".

லியோடால்ஷ்டாய் கதை ஒன்று

சமீபத்தில் லியோடால்ஷ்டாய் கதை ஒன்று படித்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.அந்த கதையானது: காலணி செய்யும் தொழிலாளி சைமனை அவனுக்கு வரவேண்டிய பாக்கி தொகைகளை வசூலித்து வருமாறு சொல்லி அவன் மனைவி அனுப்புகிறாள்.சைமனுக்கென்று நிலமோ, வேறு சொத்துகளோ இல்லை.அவன் கடுமையாக உழைத்து தன்னுடைய குடும்பத்தை நடத்துகிறான். வழிச்செலவுக்கு என்று சிறிது தொகையை கொடுத்து , அதை பார்த்து செலவு செய்யுமாறும் , வழியில் குடித்து விடாமல் இருக்குமாறும் சொல்லி அனுப்புகிறாள்.அவனும் புறப்பட்டு செல்கிறான்.அவன் வசூலுக்காக இருவேறு கிராமங்களுக்கு செல்கிறான்.அவனுக்கு பணம் தரவேண்டிய இரண்டு வீட்டிலும் பிறகு வருமாறு சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.அதே சமயம் ஒருவீட்டில் சில செருப்புகளை அவனிடம் தந்து தைத்து தரச் சொல்கிறார்கள்.அவனும் தைத்து தருகிறான்.அதற்காக அவனுக்கு கொஞ்சம் பணம் தருகிறார்கள்.அவன் அதை வாங்கிக்கொண்டு ஊர் திரும்புகிறான்.வழியில் பயங்கர குளிர் ஆக இருக்கிறது.சிறிது வோட்கா குடித்தால் நன்றாக இருக்கும் என்று அவனுக்கு தோன்றுகிறது.ஆனால் அவன் மனைவி திட்டுவாளே என்று யோசிக்கிறான்.பிறகு அவள் கொடுத்த பணத்தில் குடிப்பது இல்லைஎன்றும், செருப