சிகையலங்கார கடையால் வந்த சிக்கல்!
"வீட்டுக்கு பக்கத்துல ஒரு புது சலூன் வந்தாலும் வந்தது , ஒங்க ஆட்டம் தாங்க முடியல.அத பண்ரேன்,இத பண்ரேன்னு ஒரே காபரா!" இது எனது அருமை தர்மபத்தினியின்(அதென்ன தர்மபத்தினி? புருசன தர்ம அடி அடிக்கறவங்களா?) குமுறல். விசயம் ஒன்றுமில்லை.எனது வீட்டின் அருகே புதிதாக ஒரு Men's Saloon and Spa ஆரம்பித்தார்கள்.சரி , என்னதான் பண்ராங்கனு பாப்பமே என்று ஒருநாள் சென்றேன்.பயபுள்ள கடய பெரிக்கி, தொடச்சு சுத்தமா வைத்திருந்தான்.அதே சமயம் கடையில் ஒருவரும் இல்லை , அந்த கடைக்கார பையனைத் தவிர.வழக்கமாக நான் செல்லும் கடையில் ஒரே கூட்டமாக இருக்கும்.சலூன்காரருக்கு போன் செய்தால் , "அண்ணாச்சி! ஒரு ரெண்டு மணிநேரம் கழிச்சு வாங்க!" என்பார்.அதனால் எனக்கு இன்ப அதிர்ச்சி.பிறகு தான் அதற்கான காரணம் தெரிந்தது.கட்டிங்,சேவிங் எல்லாவற்றுக்கும் இங்கே கட்டணம் அதிகம்.இருந்தாலும் பரவாயில்லை.கடை சுத்தமாக இருக்கிறது, கூட்டமும் இல்லை என்று அங்கேயே கட்டிங்,சேவிங் செய்து கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.அதோடு நின்றிருந்தால் எனது மனைவியின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கமாட்டேன்.பொடுகு நீக்க சிகிச்சை எடுக்கிறேன் பேர்வழி என்று கா...