முட்டாள்களின் தோட்டத்தின் எலுமிச்சை மரம்
அண்மையில் ஒரு விடுமுறை நாளில் அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது.என்னுடன் பணியாற்றும் நண்பரும் வந்திருந்தார். அன்று செய்ய வேண்டிய வேலைக்கான முன்பணிகளை ஏற்கனவே செய்து வைத்திருந்தோம் .அதனால் சென்ற உடன் வேலையை தொடங்கினோம்.காலையில் ஆறரை மணிக்கு நாங்கள் எங்கள் பணியை தொடங்கினோம். நண்பர் புத்திசாலி(என்னைப் போல் இல்லை).அதிகாலை நேரத்திலே செல்வதால் நிச்சயம் சீக்கிரம் பசியெடுக்கும் என்று தெரிந்து வீட்டில் இருந்து பிரெட் சான்ட்விச் செய்து எடுத்து வந்திருந்தார்.அதை நாங்கள் சாப்பிடும் போது "இந்த பாடலை கேளுங்கள், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்று தனது செல்போனில் ஒரு பாடலை ஒலிக்க செய்தார்.அவர் சொன்னதுபோல அந்த பாடலை நான் ஒருமுறை கேட்டபோதே என்னை ஈர்த்தது.அது ஒரு ஆங்கிலப் பாடல் .ஆங்கில ஆல்பம் ஒன்றில் உள்ள பாடல்.அந்த பாடலை பற்றி மேலும் கேட்டபோது எனது நண்பர் அந்த பாடல் உள்ள தொகுப்பின் பெயர் பூல்ஸ் கார்டன்(Fools Garden) என்றும் அந்த பாடலின் பெயர் லெமன் ட்ரீ(Lemon Tree) என்றும் சொன்னார். பாடல் எனக்கு பிடித்ததற்கு காரணம் பாடலின் கவித்துமான வரிகளும் அதற்கு ஏற்ற மெல்லிய இசையும்.ப...