எருமைச்சாணி வைத்தியம்
ஒரு ஊரில் ஒரு வைத்தியர் இருந்தார். அவர் ஒருவர் தான் அந்த சுற்றுவட்டாரத்திற்கே ஒரே வைத்தியர் என்பதால் எப்போதும் அவரைக் காண மக்கள் வந்த வண்ணம் இருப்பார் .அவருக்கு இதனால் நல்ல வருமானம்.விதி யாரை விட்டது. வைத்தியருக்கு அது ஒரு ஆப்பு வைத்தது. அது என்னவென்றால் வெளியூரில் இருந்து அந்த ஊருக்கு ஒரு புது வைத்தியன் வந்து சேர்ந்தான். வந்த கொஞ்ச நாளிலேயே கைராசிக்காரன்,கெட்டிக்காரன் ,எந்த வியாதியையும் குணப்படுத்துவான் என பெயர் வாங்கிவிட்டான் அந்த புது வைத்தியன். இதனால் ஊர் மக்கள் எல்லோரும் அவனிடமே சென்று வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார்கள் .நம்ம பழைய வைத்தியனுக்கு(இனிமேல் புது வைத்தியனை பு.வை என்றும் பழைய வைத்தியனை ப.வை என்றும் சுருக்கமாக சொல்கிறேன்) இதனால் டப்பா டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டது. இப்படியே போனால் டேராவை தூக்கிக்கொண்டு வேற ஊர் தான் பார்க்கணும் அதனால் இதற்கு ஒரு முடிவு கட்டுவோம் என்று நம்ம ப.வை கிளம்பினார். கிளம்பியவர் நேரே பு.வை வீட்டிற்கு சென்றார்.பு.வியிடம் "எனக்கு ஒரு விசித்திர வியாதி உள்ளது. நீங்கள் தான் எப்படியாவது அதை குண...