ஆங்கில நாவல்கள்
எனக்குத் தெரிந்த மொழிகள் மூன்று தான். தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு. இதில் தமிழ் தாய்மொழி என்பதால் சரளமாக பேச, எழுத வரும். ஆங்கிலம் அலுவலகத்தில் அதிகம் பயன்படுத்துவதால் அதுவும் ஓரளவு சரளமாக பேசவும், எழுதவும் வரும். பிரெஞ்சு எனது மொழி ஆர்வத்தால் நான் கற்றுக் கொண்டது.அதிகம் உபயோகிக்காததால் வெகு சுமாராக பேசவும், எழுதவும் வரும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் தமிழ் தவிர மற்ற மொழி புத்தகங்களை அதிகம் படிக்க மாட்டேன். அதுவும் ஆங்கில நாவல்கள் எனக்கு மிகவும் அலர்ஜி. ஆனால் நான் அலுவலக விசயமாக வெளிநாட்டிற்கு சென்று சிறிது காலம் தங்க வேண்டியிருந்தது. நானோ புத்தக புழு. அங்கோ தமிழ் புத்தகங்கள் கிடைப்பது வெகு சிரமம். என்ன செய்வது? சரி, இந்த ஆங்கில நாவல்களை முயற்சி செய்து தான் பார்ப்போமே என்று அருகிலிருந்த பெரிய புத்தகக் கடைக்கு சென்று புத்தகங்களை பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தேன்.நான் தமிழிலேயே விரும்பிப் படிப்பது மர்ம நாவல்கள் தான்.எனவே அது போலவே ஆங்கிலத்திலும் தேடினேன்.ஆங்கில நாவல்களில் உள்ள சவ்கர்யம் பின் அட்டையில் கதை சுருக்கம் போட்டிருப்பார்கள்.அது மட்டுமல்லாமல் முன் அட்டையில் "பெஸ்ட்...