மை டியர் குட்டிச்சாத்தான்
குட்டிச்சாத்தான். குறும்பு செய்யும் குழந்தைகளை இப்படி "அன்புடன்" அழைப்பது நமது வழக்கம்.நான் அடிக்கடி இத்த வார்த்தையை உபயோகிப்பேன்.எனது அக்கா மகனை இப்படித்தான் கூப்பிடுவேன்.அவன் சரியான அறுந்த வால்.ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டான்.அதே சமயம் பெரிய ஆட்களையும் அப்படி அழைப்பேன். எங்கள் அலுவலகத்தில் எனக்கு அடுத்த இருக்கையில் அமரும் நபரை இப்படி சொல்லி திட்டுவேன்.அவனும் இப்படித்தான். எப்போது பார்த்தாலும் எதாவது விஷமம் பண்ணிக் கொண்டு இருப்பான். குறும்பு செய்பவர்களை ஏன் குட்டிச்சாத்தான் என்று அழைக்கிறோம்?யார் இந்த குட்டிச்சாத்தான்? இப்படி எல்லாம் உட்கார்ந்து யோசித்ததன் விளைவே இந்த பதிவு. குட்டிச்சாத்தான் பற்றி நிறைய கதைகள். மை டியர் குட்டிச்சாத்தான் படம் நிறைய பேர் பார்த்திருப்பார்கள்.அதில் குட்டிச்சாத்தான் குழந்தைகளின் நண்பன் எனக் காண்பித்திருப்பார்கள்.கேரளா மாந்திரீகத்தில் குட்டிச்சாத்தான் ஒரு அங்கம்.எனது நண்பர் ஒருவரிடம் கேட்டபோது அவர் , சாத்தன் என்றால் சிவன் என்றும், குட்டிச்சாத்தான் சிவனின் ஒரு அம்சம் என்றும் சொன்னார். குட்ட...