அமெரிக்காவிற்கு பஸ்சில் போலாம்!
பிப்ரவரி முதல்வாரம் எனது சின்ன மச்சினன் அமெரிக்கா சென்றுவிட்டான் .அவன் சென்ற பிறகு எனது மாமியார் வீட்டில் நடந்த காமெடி கொஞ்ச ,நஞ்சம் இல்லை. எனது மாமியார் வீட்டின் மேல்மாடியில் ஒரு குடும்பம் வாடகைக்கு இருக்கிறது. அந்த வீட்டு அம்மா , எனது மனைவியிடம் "அமெரிக்காவிற்கு பஸ்சில் போனால் எவ்வளவு நாளாகும் ?" என்று முகத்தை சீரியசாக வைத்து கொண்டு கேட்க , எனது மனைவியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அமரிக்காவிற்கு பஸ்சில் எல்லாம் போக முடியாது , விமானத்தில் தான் போக முடியும் என்று அவர்களுக்கு விளக்கி சொல்லியிருக்கிறாள் . இதைவிட பெரிய கூத்து ஒன்று நடந்தது.எனது மாமியார் வீட்டின் அருகே ஒரு காய்கறி கடை இருக்கிறது.அந்த கடை முதலாளிக்கு பள்ளி செல்லும் இரண்டு சின்ன பையன்கள் இருக்கிறார்கள்.எனது மச்சினன் அமெரிக்கா சென்ற பிறகு அவர்கள் இருவரும் எனது மனைவியிடம் அடிக்கடி "நிலவில் இப்போது பகலா,இரவா? நிலவில் ரொம்ப குளிருமா?" என்றெல்லாம் கேட்ட...