பலகாரம், ஜாக்கிரதை!!!
தீபாவளியை அவ்வளவு விமரிசையாய் கொண்டாட மாட்டோம் என்று சென்ற பதிவில் பகுமானமாய் சொல்லிவிட்டேன். ஆனாலும் இந்த தீபாவளி பலகாரம் சாப்பிடாமல் இருக்க முடியுமா? ஹிஹி. வளரும் பிள்ளை என்பதால் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டேன்.அது என்னடாவென்றால் வயிற்றை கடமுட என்று என்னவோ பண்ணுகிறது. எனது அக்கா வேறு "முன்யோசனை இல்லாமல் சாப்பிட்டால் இப்படித்தான் 'பின்விளைவுகள்' இருக்கும்" என்று சொல்லி ஓட்டிக் கொண்டிருக்கிறாள். எனக்கு இந்த இங்கிலீஷ் மருந்துகள் அவ்வளவாய் கேட்காது.அதனால் வீட்டில் இருந்த ஓமத்திரவத்தை தண்ணிரில் கலந்து குடித்தேன். அதன்பிறகு வயிறு பரவாயில்லாமல் இருக்கிறது. அப்படியும் எங்கள் வீட்டில் என்னை விட்டார்களா என்றால் அதுதான் இல்லை. இன்று ஊருக்கு கிளம்புகிறேன் என்று வீட்டில் உள்ள பலகாரங்களை எல்லாம் மூட்டைகட்டி தயாராக வைத்துள்ளார்கள்.எதற்கு என்று கேட்டால் "இங்கு இதை எல்லாம் சாப்பிட ஆள் இல்லை. நீ கொண்டு போய் உனது நண்பர்களுக்கு கொடு" என்று பதில் வேறு. ஹ்ம்ம்.விதி யாரைவிட்டது.இந்த பதிவை எனது நண்பர்கள் படிக்கும்முன் இந்த பலகாரங்களை அவர்கள் தலையில் கட்டிவிட வேண்டும்.அதற்க...