Posts

Showing posts from November 5, 2006

தமிழர்களும்,இட்லியும்

தமிழர்களின் வாழ்வில் இட்லி எவ்வாறு நீக்கமற கலந்துள்ளது என்று நினைத்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது.வெளி நாடு செல்லும் மனிதர்கள் கூட அங்கு அரிசி கிடைக்குமா? மாவு கிடைக்குமா? என்று விசாரிப்பதை காணலாம்.தூங்கா நகரமான மதுரை இட்லிக் கடைகளுக்கு பெயர்போனது. நான் மதுரைக்காரன் என்பதில் எனக்கு எப்போதுமே ஒரு பெருமை உண்டு.அங்கு நான் படித்தபோது நிறைய கையேந்திபவன்களில் இட்லியை ரசித்து,ருசித்து சாப்பிட்டிருக்கிறேன். நீங்கள் சாப்பிடுவது இரண்டே இட்லியாய் இருந்தாலும் கூட அதற்கு நான்கு வகை சட்னி தருவார்கள். நினைத்துப் பார்த்தால் இப்பொழுதும் அந்த ருசி நாவில் தெரிகிறது. சென்னைக்கு வந்த பிறகு அப்படி ருசியான இட்லி எங்காவது கிடைக்காதா என்று ஏங்கியபோது ஆபத்பாந்தவனாய் அமைந்தது 'முருகன் இட்லிக்கடை'.என்ன ஒரு ருசி. இதுவரை இரண்டேமுறை தான் அங்கு சாப்பிட்டிருக்கிறேன்.அடுத்து, சரவணபவன் மினி இட்லி. நெய்மணக்க தருவார்கள்.விலை அதிகம் என்றாலும் கொடுத்தகாசுக்கு திருப்தியாக சாப்பிட்டுவிட்டு வரலாம். மயிலாப்பூரில் ஒரு வீட்டில் இருந்து தினமும் இட்லியை மலேசியா, சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்கிறார்களாம்.இப்படி பார்க்கும் இட...

இது ஒரு சோக்கு!!!

இது ஒரு சோக்கு.அதாவது நகைச்சுவை. மூன்று நண்பர்கள் ஒரு ஆயிரம் மாடி குடியிருப்பில் வசித்து வந்தார்கள்.அவர்களது வீடு 910வது தளத்தில் இருந்தது.லிப்ட் வசதி இருப்பதால் அவர்களுக்கு ஒன்றும் சிரமமாக இல்லை. ஒரு நாள் மூவரும் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தனர்.லிப்ட் பொத்தானை அழுத்திப் பார்த்தால் அது இயங்கவில்லை.அவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.வேறு வழியேயில்லை, நடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்.அது என்னவென்றால் இத்தனை மாடிகளையும் கடந்து செல்லும் களைப்பு தெரியாமல் இருக்க ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல வேண்டும் என்பதாகும்.முதலில் ஒருவன் ஆரம்பித்தான்.அது மிகவும் சுவாரசியமான கதையாய் இருந்தது.அவன் கதையை முடிக்கும் போது 400 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.அடுத்து இரண்டாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அது முதலாமவன் சொன்னதைவிட சுவாரசியமாக இருந்தது.கதையை முடிக்கும் போது 850 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.இப்பொழுது மூன்றாமவன் முறை.இருவரும் அவன் முகத்தை பார்த்தார்கள்.அவன் சொன்னான்." நீங்கள் இருவரும் நல்ல கதை சொன்னீர்கள்.முதலாமவன் திகில் கதையும்,இரண்...

வெகு நாட்களுக்கு பிறகு...

வணக்கம் தோழர்களே! நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவை இடுகிறேன். "சூடிக் கொடுத்த சுடர்கொடி" ஆண்டாளைப் பற்றி சிறிது பேசுவோம். ஆண்டாள் தமிழின் பெண்பாற் புலவர்களில் முக்கியமானவர்.மகாவிஷ்ணுவை கணவனாக அடைய வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் இருந்து அதை சாதித்துக் காட்டியவர். அவருடைய திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவை பக்தி ரசம் நிறைந்தவை. திருப்பாவையில் வரும் "ஓங்கி உளகளந்த" பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஓங்கி உளகளந்த உத்தமனாம் நாராயணனை வணங்கி பாவை நோன்பிருந்தால் விளையும் நன்மைகளை அப்பாடலில் அழகாக கூறியிருப்பார் ஆண்டாள்.தீங்கின்றி நாடெங்கும் மழை பெய்யும்,அதனால் நெற்பயிர்கள் ஓங்கி வளரும் , அப்படி வளர்ந்த கதிர்களுக்கு இடையே மீன்கள் துள்ளி விளையாடும், குவளைபோதை மலரில் வண்டானது தேன் குடித்த மயக்கத்தில் உறங்கும்,பசுக்கள் குடம்குடமாய் பால் சொரியும், எங்கும் நீங்காத செல்வம் நிறைந்திருக்கும் என்று அந்த பாடலில் ஆண்டாள் சொல்லியிருப்பார். என்ன ஒரு அழகான பாடல்.தினமும் இந்த பாடலை காலையில் பாடி அந்த பொழுதை தொடங்குங்கள்.அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள்.