Posts

Showing posts from November 8, 2009

மகாபாரதத்தில் உள்ள செய்தி

மகாபாரதத்தில் நிறைய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. யாரையும் இழிவாக கருதி அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை பின்வரும் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. பாரதப்போர் நடந்து கொண்டிருக்கிறது.அர்ஜுனனை கொல்ல கர்ணன் நாகாஸ்திரத்தை நிச்சயம் பயன்படுத்துவான் என்று கிருஷ்ணனுக்கு தெரியும்.அதனால் அதற்கு முன்பே அவர் குந்தியிடம் கர்ணன் பாண்டவர்களில் மூத்தவன் என்பதை சொல்லிவிடுகிறார்.அது மட்டுமல்ல இதை கர்ணனிடம் போய் சொல்லுமாறும், கூடவே அவனை கவுரவர்களை விட்டு பிரிந்து பாண்டவர் அணியில் சேருமாறு கேட்கவும் சொல்கிறார். அதற்கு அவன் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருதடவைக்கு மேல் பிரயோகிக்காமல் இருக்க அவனிடம் வரம் வாங்குமாறும் கூறுகிறார்.குந்தியும் உடனே கர்ணனை சென்று பார்த்து தான்தான் அவன் தாய் என்று சொல்லி அழுகிறாள்.கர்ணன் இதைக் கேட்டு மகிழ்கிறான்.பிறகு குந்தி அவனை பாண்டவர் அணியில் சேர நிர்பந்திக்கிறாள். அதற்கு கர்ணன் உறுதியாக மறுத்துவிடுகிறான்.அதனால் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருதடவைக்கு மேல் பிரயோகிக்காமல் இருக்க வேண்டும் என்று அவனிடம் குந்தி கேட்க அவனு...