Posts

Showing posts from November 1, 2009

ஓடுங்க!!! திங்கள் கிழமை வருது!!!

சனி, ஞாயிறு கிழமைகள் வருவதும் தெரிவதில்லை. போவதும் தெரிவதில்லை. இந்த இரண்டு நாட்களுக்காக நாம் ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.இருந்தும் ஒரு புண்ணியமும் இல்லை.வெள்ளிக்கிழமை பொழுது விடியும்போதே ஒரே குஜாலாக இருக்கும்.பொழுதுபோய் மாலை ஆனால் இன்னும் சந்தோசம். சினிமா போபவர்கள், நண்பர்களை பார்க்க போபவர்கள் , வெளியே சுற்றுபவர்கள் என்று ஒரே குஷி தான்.சனிக்கிழமையும் சந்தோசமாக போகும். ஞாயிறு வந்தவுடன் மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நினைப்பே கடுப்பைக் கிளப்பும். ஞாயிறு மாலை வந்தால் கடுப்பு இன்னும் கூடும். திங்கள் காலை கேட்கவே வேண்டாம். ஒரு லிட்டர் விளக்கெண்ணை குடித்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு அலுவலகம் கிளம்ப வேண்டியது தான். பள்ளிப் பருவத்தில் தான் திங்கள் கிழமை வில்லனாக இருந்தது என்றால் இப்போதும் அப்படிதான் இருக்கிறது. என் மனைவியை சென்ற திங்கள் கிழமை அலுவலகம் அனுப்ப அவர்கள் அலுவலக பேருந்து வழக்கமாக நிற்கும் இடத்தில் நின்றிருந்தேன். அந்த இடத்தில் ஒரு சிறுவர் கூட்டம். ஏதோ ஒரு பள்ளி பேருந்திற்காக அவர்கள் தத்தமது பெற்றோருடன் நின்றிருந்தனர். அதில் ஒரு சிறுமி அழு அழு என்று அழுது தீர்த...