Posts

Showing posts from 2019

கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)

          கிருஷ்ணன் இல்லாமல் பாண்டவர்கள் போரில் ஜெயித்திருக்க முடியாது என்பது மஹாபாரதம் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.பாரதப்போரில் அர்ஜுனனின் சாரதியாக இருந்து அவனை பல அபாயங்களில் இருந்து கிருஷ்ணன் தான் காப்பாற்றுகிறான். அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் போர் உக்கிரமாக நடக்கிறது.அப்போது அர்ஜுனன் எய்யும் அம்பு பட்டு கர்ணனின் தேர் பல அடி தூரம் தள்ளி செல்கிறது.அப்போது கிருஷ்ணன் புன்னகைக்கிறான் . பதிலுக்கு கர்ணன் எய்யும் அம்புபட்டு அர்ஜுனன் தேர் சில அடி தூரம் பின்னால் செல்கிறது.அதற்கு கிருஷ்ணன் "ஆஹா! பிரமாதம்" என்று  பாராட்டுகிறான். நமது அர்ஜுனனுக்கோ எரிச்சல்.கிருஷ்ணனை பார்த்து "கிருஷ்ணா! என்ன கொடுமை இது! என் அம்பு வீச்சு கர்ணன் தேரை பல அடி பின்னால் தள்ளும்போது நீ வெறுமனே சிரிக்கிறாய்.அதுவே அவன் அம்பு நம் தேரை சில அடி தள்ளினால் அவனை பாராட்டுகிறாய்.ஏன்?" என்கிறான்.            கிருஷ்ணன் புன்னகைத்து சொல்கிறான், "அர்ஜுனா!  உனது தேரின் கொடியில் பராக்கிரமசாலியான அனுமன் இருக்கிறான்.சாரதியாக நான் இருக்கிறேன்.அப்படி இர...