வெகு நாட்களுக்கு பிறகு...
வணக்கம் தோழர்களே! நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவை இடுகிறேன். "சூடிக் கொடுத்த சுடர்கொடி" ஆண்டாளைப் பற்றி சிறிது பேசுவோம். ஆண்டாள் தமிழின் பெண்பாற் புலவர்களில் முக்கியமானவர்.மகாவிஷ்ணுவை கணவனாக அடைய வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் இருந்து அதை சாதித்துக் காட்டியவர். அவருடைய திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவை பக்தி ரசம் நிறைந்தவை. திருப்பாவையில் வரும் "ஓங்கி உளகளந்த" பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஓங்கி உளகளந்த உத்தமனாம் நாராயணனை வணங்கி பாவை நோன்பிருந்தால் விளையும் நன்மைகளை அப்பாடலில் அழகாக கூறியிருப்பார் ஆண்டாள்.தீங்கின்றி நாடெங்கும் மழை பெய்யும்,அதனால் நெற்பயிர்கள் ஓங்கி வளரும் , அப்படி வளர்ந்த கதிர்களுக்கு இடையே மீன்கள் துள்ளி விளையாடும், குவளைபோதை மலரில் வண்டானது தேன் குடித்த மயக்கத்தில் உறங்கும்,பசுக்கள் குடம்குடமாய் பால் சொரியும், எங்கும் நீங்காத செல்வம் நிறைந்திருக்கும் என்று அந்த பாடலில் ஆண்டாள் சொல்லியிருப்பார். என்ன ஒரு அழகான பாடல்.தினமும் இந்த பாடலை காலையில் பாடி அந்த பொழுதை தொடங்குங்கள்.அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள்.
Comments