லிட்டில் மேரி சோக்கு

லிட்டில் மேரி ஜோக்குகள் அமெரிக்காவில் பிரபலம்(லிட்டில் ஜானி ஜோக்கும் தான்.ஆனால் பெரும்பாலான லிட்டில் ஜானி ஜோக்குகள் 'ஏ' ரகத்தை சார்ந்தவை).லிட்டில் மேரியை ஒரு அப்பாவி சிறுமியாக சித்தரித்திருப்பார்கள்.அதில் ஒரு சோக்கு இங்கே:
லிட்டில் மேரி தனது தோட்டத்தில் அழுதுகொண்டு எதையோ குழியில் தள்ளி புதைத்து கொண்டு இருந்தாள்.அவளது அண்டை வீட்டுக்காரர் இதைபார்த்து,"லிட்டில் மேரி! எதற்காக அழுது கொண்டு இருக்கிறாய்?" என்று கேட்டார். லிட்டில் மேரி சொன்னாள்,"எனது செல்ல மீன் இறந்துவிட்டது. அதை புதைத்துக் கொண்டு இருக்கிறேன்".பக்கத்து வீட்டுக்காரர் உடனே," அடடா! அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் ஒரு மீனிற்கு இந்த குழி மிகவும் பெரியது" என்றார்.அதற்கு லிட்டில் மேரி சொன்னாள்," மீன் என்னவோ சின்னதுதான்.ஆனால் அது இருப்பது உங்கள் பூனையின் வயிற்றுக்குள்ளே".

Comments

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)