விறகுவெட்டியும்,தேவதையும் - புதுக்கதை

நம் எல்லோருக்கும் விறகுவெட்டி கதை தெரியும்.காட்டுக்கு மரம் வெட்டச் செல்லும் விறகுவெட்டி ஆற்றில் தன் கோடரியை தவறவிட்டுவிடுவான்.பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் அழுவான்.உடனே ஒரு தேவதை தோன்றி "எதற்காக அழுகிறாய்?" என்று கேட்கும்.இவன் நடந்ததை சொல்வான்.அந்த தேவதை முதலில் ஒரு தங்கக் கோடரி தரும்.விறகுவெட்டி அது தனது கோடரி இல்லை என்பான்.பிறகு தேவதை வெள்ளி கோடரி தரும்.இவன் அதுவும் தன்னது இல்லையென்பான்.கடைசியில் இரும்பு கோடரி தரும்.உடனே அதுதான் தன்னுடைய கோடரி என்பான்.அவனுடைய நேர்மையை மெச்சி மூன்று கோடரிகளையும் அவனுக்கு தேவதை தந்துவிடும்.
புதிய கதை என்ன தெரியுமா? விறகுவெட்டி வழக்கம் போல் காட்டுக்கு சென்றான்.இந்த முறை அவனுடைய மனைவியையும் அழைத்து சென்றான்.அவன் மும்முரமாய் விறகு வெட்டிக் கொண்டு இருந்த போது அவன் மனைவி ஆற்றில் விழுந்துவிட்டாள்.அவன் உடனே ஓவென்று அழ ஆரம்பித்தான்.வழக்கம்போல் தேவதை வந்தது."இந்த தடவ எத தண்ணிக்குள்ள போட்ட, எடுபட்டபயலே?" என்று கேட்டது.விறகுவெட்டி "என் மனைவி ஆற்றில் விழுந்துவிட்டாள்" என்றான்.தேவதை ஆற்றில் இருந்து ரம்பையை வரவழைத்து "இவளா உன் மனைவி ?" என்று கேட்டது.விறகுவெட்டி உடனே, "ஆமாம்.இவள்தான் என் மனைவி" என்றான்.தேவதி செம கடுப்பாகிவிட்டது."ஏன்டா டேய்! போனதடவ கோடரி விசயத்துல நேர்மையா இருந்த. இந்த தடவ பொய்யா சொல்ற.உன்ன என்ன பண்ரேன் பார்" என்றது.விறகுவெட்டி ரொம்ப கூலாக, 'அடப் போ! நான் இவ என் சம்சாரம் இல்லனு சொன்னா நீ அடுத்து மேனகைய காமிப்ப. நான் அவளும் என் சம்சாரம் இல்லம்பேன்.கடசில என் சம்சாரத்த காமிப்ப. நான் இவதான் என் மனைவிம்பேன். நீ உடனே என் நேர்மைய பாரட்டி மூனு பேரையும் எனக்கு கொடுப்ப.ஒருத்திய வச்சுகிட்டே என்னால சமாளிக்க முடியல.இதுல மூனுபேரு வந்தா நான் என்ன செய்வேன்.அதான் ரம்பையோட நிறுத்திகலாமுன்னு அவதான் என் மனைவினு சொன்னேன்" என்றான்.தேவதை மயங்கி விழுந்தது.

Comments

Akila Alexander said…
old wine in OLD BOTTLE
Holy Nemesis said…
Nope you're wrong.

Its new wine in an Old bottle.

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

இமயத்து ஆசான்கள்