மைனாவும், நைனாவும்
சிறுவன் ராமு ஒரு நாள் ஒரு மைனாவை வாங்கி வந்தான்.அதை மிகவும் பாசமாக வளர்த்து வந்தான்.மதியம் உணவு இடைவேளையின்போது வீட்டிற்கு ஓடி வந்து மைனாவை பார்த்துவிட்டு செல்வான்.ஒரு நாள் அவன் பள்ளிக்கு சென்றபிறகு அவன் தாய் மைனா கூண்டை சுத்தம் செய்ய திறந்தாள்.அப்பொழுது அது வெளியே வந்து கீழே விழுந்துவிட்டது.இதில் அதன் ஒருகால் உடைந்துவிட்டது.இதைப் பார்த்த அவள் மிகவும் கவலை கொண்டாள்.ராமுவிற்கு என்ன சமாதானம் செய்வது என்று யோசித்தாள்.அதற்குள் மதியம் வந்துவிட்ட ராமு, "அம்மா!பசிக்கிது சாப்பாடு போடுமா" என்றான்.அவன் தாய் மெதுவாக,"ராமு, மைனவுக்கு கால் உடைஞ்சிருச்சு" என்றாள்.உடனே ராமு,"அம்மா! நானே பயங்கர பசில வந்துருக்கேன், சீக்கிரம் சோறு போடுமா" என்றான்.அவன் தாய்க்கு ஒரே ஆச்சரியம், அதே சமயம் நிம்மதி.பிறகு ராமு பள்ளிக்கு திரும்பிவிட்டான்.மீண்டும் மாலை வீட்டிற்கு வந்தவன் மைனாவை பார்த்தான்.அதன் கால் உடைந்திருப்பதை பார்த்த அவன் ஓவென்று அழ ஆரம்பித்தான்.அவன் தாய் ஓடி வந்து "ஏன்டா அழற" என்றால்.ராமு, " அம்மா மைனாவிற்கு கால் உடைந்து இருக்கு. நீ ஏன் என்கிட்ட சொல்லல?" என்றான்.அவன் தாய் குழம்பிப் போய்," ஏன்டா! நாந்தான் மதியமே சொன்னனே! அப்ப எதுவும் சொல்லாம இப்ப அழுகிற?" என்றாள். ராமு சொன்னான்,"அம்மா, மதியம் நீ சொல்லும்போது நைனாவுக்கு கால் உடஞ்சு போச்சுனு என் காதுல விழுந்தது.அதான் அமைதியா இருந்துட்டேன்" என்றான்.
Comments
(பின்னூட்டத்துக்கு இந்த பாப்-அப் விண்டோ அவசியம்தானா?)
இப்பொழுது செட்டிங்கை மாற்றிவிட்டேன் நண்பரே!