சிரிப்போ சிரிப்பு!!!

வெயில் படும் பொருட்கள் எல்லாம் அழகாக இருப்பதாக கவிஞர் ஷெல்லி சொன்னான்.அதுபோல சிரிக்கும் போது எல்லா மனிதர்களும் அழகாக இருப்பதாக எனக்கு தோன்றும்.நான் தினமும் சந்திக்கின்ற,பழகுகின்ற மனிதர்களிடம் நான் கூர்ந்து கவனிப்பது அவர்களின் சிரிப்புதான்.சிரிப்பில்தான் எத்தனை வகை.நல்ல சிரிப்பு,கள்ள சிரிப்பு,ஆணவ சிரிப்பு,மயக்கும் சிரிப்பு ....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.என் அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர்களில் இருவரின் சிரிப்பு ரசிக்கும்படி இருக்கும்.ஒருவன் ஆந்திராக்காரன்(பிரதீப் என்பது அவனது திருநாமம்).அவனுக்கு வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவை.எதற்கெடுத்தாலும் சிரிப்பான்.அந்த சிரிப்பும் இதயத்தில் இருந்து வரும்.இன்னொருவர் எனது அருமை நண்பர் செந்தில். ஒருவிதமான குறும்புத்தனம் நிறைந்த ஒரு சிரிப்பு சிரிப்பார்.அதுவும் சத்தமாக சிரிப்பார்.பார்க்க மிக அழகாக இருக்கும். அடுத்த நான் ரசித்த சிரிப்பு என் மாப்பிள்ளை சுந்தருடைய சிரிப்பு.பேசும்போது ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஒரு சிரிப்பு சிரிப்பான்.கேட்க சந்தோசமாக இருக்கும். என்னுடைய சிரிப்பின் மேல் எனக்கு பெரிய அபிப்பிராயம் கிடையாது.ஏதோ சிரிப்பேன் , அவ்வளவுதான்.ஆனால் என் வீட்டுக்காரி அதை ரசிப்பாள்.(பாவம் அவளுக்கு வேறு வழியில்லை என்கிறீர்களா? அதுவும் சரிதான்).

Comments

Unknown said…
touch pannitinga bava touch pannitinga
thanks for the compliment
coolzkarthi said…
எனக்கு தெரிந்து சிரிப்பை விட நல்ல வரவேற்பு இருக்க முடியாது..
அந்த சிரிப்பிலேயே நாம் ஒரு சிறந்த விருந்தோம்பலை கொடுத்து விட்டோம் என்று சொல்லலாம்..நினைத்து பாருங்கள் நாம் ஒரு நண்பரின் வீட்டுக்கு போகிறோம் அவர் சிரிக்காமல் வா என்று அறுசுவை உணவை வழங்கினாலும் நம் மனதில் அவர் முகமே உறுத்தும்...
நண்பர்களையோ,தெரிந்தவர்களையோ வழியில் பார்க்கிறீர்களா,பேச விருப்பம் இல்லையா,முகத்தை மறைக்காமல் சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு செல்லுங்கள் அது உங்களுக்கு நல்ல மனநிலையை மட்டுமல்ல எந்த ஒரு இறுக்கமும் இல்லாத சூழ்நிலையை தரும் ,அந்த நண்பரின் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியை தரும் அதை விட்டு இவன் எங்கே வந்தான் என்று என்னும் வண்ணம் முகத்தை இறுக்கமாக வைத்து கடக்காதிர்கள்.
இரண்டு நாட்கள் முன்பு ஒரு ரயில் பயணம் செல்ல வேண்டி இருந்தது,வண்டியில் ஏறிய உடன் பக்கத்திலே கதவோரம் இருந்த ஒருவன் அவன் பாட்டுக்கு சிரித்து கொண்டே இருந்தான்..முதலில் பைத்தியம் என்று நாங்கள் இருந்தோம்,சிறிது நேரத்தில் அருகில் இருந்தவர்கள் முகத்திலும் எனது முகத்திலும் கூட அவன் சிரிக்கும் நேரங்களில் சின்ன புன்னகை...மனம் அவ்வளவு நேரம் யோசித்து வந்த அனைத்தையும் மறந்து அமைதியானது போன்ற ஒரு உணர்வு,நான் அருகில் இருந்தவரை பார்த்து சிரிக்க அவரும் என்னை போன்று ஏதோ பல நாள் பழக்கம் போல என்னிடம் சிரித்து பேசினார்,அருகில் அமர்ந்திருந்த ஒரு வட நாட்டு பெண் எங்கள் பேச்சு புரியாவிட்டலும் கண்களால் எங்களை விட அதிகமாக சிரித்தாள்,இள நகை புரிந்த வண்ணம் இருந்தாள்...அந்த பைத்திய (சாரி) கதவருகே இருந்த அந்த சிரிப்பு மனிதர் இறங்கி போக எங்களிடம் அந்த கள்ளம் இல்லாத சிரிப்பு மிச்சம் இருந்தது..எனது ஊரில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்,அருகே யாரோ நடந்து செல்ல,அவர்கள் முன் என் சிரிப்பை விருந்தோம்பல் ஆக்கினேன்..முதலில் தயங்கிய அவர் மீண்டும் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்...
nalla sirikkuranga sirippu ha ha ha ha ha...

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)