தீபாவளி சமயத்தில் பொங்கல் பதிவு

தீபாவளி திருநாளை நல்லவிதமாக கொண்டாடியாகிவிட்டது. இனி அடுத்து பெரிய பண்டிகை என்றால் அது பொங்கல் தான். மதுரைப் பக்கம் நாங்கள் தீபாவளியை பெரிதாக கொண்டாட மாட்டோம்.சேட்டுகள் இதற்கு விதிவிலக்கு.அவர்கள் தீபாவளியை லக்ஷ்மி பூஜை என்று கொண்டாடுவார்கள்.எங்களுக்கு பெரிய பண்டிகை பொங்கல் தான். பண்டிகை என்றால் குறைந்தது மூன்று நாட்களாவது கொண்டாட வேண்டும்.அப்படிப்பார்த்தால் பொங்கல் ஒரு சிறந்த பண்டிகை.நான்கு நாட்கள் நிதானமாக கொண்டாடலாம்.அதைவிட முக்கியம் தீபாவளியை ஒப்பிடும்போது பொங்கலுக்கு செலவு குறைவு.அதனால் ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி அனைவரும் நிறைவாய் கொண்டாடலாம் .புதுப்பானை, பச்சரிசி,வெல்லம்,கரும்பு இவை போதும் பொங்கலுக்கு.சென்ற பொங்கலுக்கு என்னால் கரும்பு சாப்பிட முடியவில்லை.மேல்தாடை பல்லில் இருந்த தொந்தரவு காரணமாக கரும்பு சாப்பிடுவதை தவிர்த்தேன். இந்தமுறை அதற்கும் சேர்த்துவைத்து சாப்பிட வேண்டும்.நெய் சொட்ட சொட்ட வீட்டில் சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். அதன் மணமே நம்மை சாப்பிட சொல்லும்.
கோவிலில் தருகின்ற பொங்கல் ஒரு தனிச்சுவை கொண்டிருக்கும். சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி கோவில் பொங்கல் எனக்கு நிரம்பப் பிடிக்கும்.பெருமாளை கண்குளிர சேவித்துவிட்டு பிறகு பொங்கலை வயிறார உண்ணலாம்.ஆன்மிகத்தில் உணவிற்கு நிரம்ப முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் தான் தாய் பார்வதியை அன்னபூரணியாக காசியில் வணங்குகிறோம்.சாப்பிடுவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்லி பிறகு உண்ணும் பழக்கம் பலரிடம் உள்ளது. எனது தந்தையார் இதை தவறாமல் செய்வார். எனது அருமை நண்பர் செந்தில் அதை தவறாமல் செய்வார். இது ஒரு சிறந்த பழக்கம். ஹ்ம்ம்ம்ம்.எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். என் மருமகன் கார்த்தி இதைப் படித்தால் என்னை கலாட்டா செய்வான்.பரவாயில்லை , அவனது ப்ளாகில் நான் கமெண்ட் போட்டு சமாளித்துவிடுவேன்.

Comments

coolzkarthi said…
ஓஹோ பேஷ் பேஷ்....இப்பதான் நீங்க வாரா வாரம் கோயிலுக்கு போற காரணம் புரியுது....ம்ம்ம் நடத்துங்க...(அப்படியே எனக்கும் ஒரு பொட்டணம் ப்ளீஸ்)

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

இமயத்து ஆசான்கள்