ஆங்கில நாவல்கள்

எனக்குத் தெரிந்த மொழிகள் மூன்று தான். தமிழ்,
ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு. இதில் தமிழ் தாய்மொழி என்பதால் சரளமாக பேச, எழுத வரும். ஆங்கிலம் அலுவலகத்தில் அதிகம் பயன்படுத்துவதால் அதுவும் ஓரளவு சரளமாக பேசவும், எழுதவும் வரும். பிரெஞ்சு எனது மொழி ஆர்வத்தால் நான் கற்றுக் கொண்டது.அதிகம் உபயோகிக்காததால் வெகு சுமாராக பேசவும், எழுதவும் வரும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் தமிழ் தவிர மற்ற மொழி புத்தகங்களை அதிகம் படிக்க மாட்டேன். அதுவும் ஆங்கில நாவல்கள் எனக்கு மிகவும் அலர்ஜி. ஆனால் நான் அலுவலக விசயமாக வெளிநாட்டிற்கு சென்று சிறிது காலம் தங்க வேண்டியிருந்தது. நானோ புத்தக புழு. அங்கோ தமிழ் புத்தகங்கள் கிடைப்பது வெகு சிரமம். என்ன செய்வது? சரி, இந்த ஆங்கில நாவல்களை முயற்சி செய்து தான் பார்ப்போமே என்று அருகிலிருந்த பெரிய புத்தகக் கடைக்கு சென்று புத்தகங்களை பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தேன்.நான் தமிழிலேயே விரும்பிப் படிப்பது மர்ம நாவல்கள் தான்.எனவே அது போலவே ஆங்கிலத்திலும் தேடினேன்.ஆங்கில நாவல்களில் உள்ள சவ்கர்யம் பின் அட்டையில் கதை சுருக்கம் போட்டிருப்பார்கள்.அது மட்டுமல்லாமல் முன் அட்டையில் "பெஸ்ட்செல்லர்" என்று குறிப்பிட்டு இருப்பார்கள்(அது அதிகம் விற்பனையாகிற புத்தகமாக இருந்தால்).அதன் அடிப்படையில் ஒரு புத்தகம் வாங்கினேன்.அதை படிக்க நிறைய நேரமாகும் என்று எண்ணினேன்(ஆங்கில புத்தகம் என்பதால்). ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு நாட்களில் அதை படித்து முடித்துவிட்டேன்.காரணம் கதை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.எனக்கு உடனே ஆங்கில புத்தகங்கள் வாங்கிப் படிப்பதில் இருந்த தயக்கம் அகன்றது.பிறகென்ன, ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்கி குவித்தேன்.எல்லாவற்றையும் படித்து முடித்துவிட்டேன்.இந்தியா திரும்பி வந்த பிறகும் அது தொடர்கிறது. நான் படித்து ரசித்த புத்தகங்களின் பெயரை இங்கு பட்டியலிட்டுள்ளேன். நாவல் பிரியர்கள் முயன்று பாருங்கள். முதலில் இருப்பது நாவல் பெயர்.அடைப்புக் குறிக்குள் இருப்பது எழுதியவர் பெயர்.

விதௌட் எ சௌன்ட் (கார்லா காசிடி)
இல் வின்ட் (நெவாடா பார்)
கான் (லிசா கார்டனர்)
ஹைட் (லிசா கார்டனர்)
டெல் நோ ஒன் (ஹார்லன் கோபென்)
நோ செகண்ட் சான்ஸ் (ஹார்லன் கோபென்)
தி சேம்பர் (ஜான் க்ரிசாம்)
எ ப்ரிசநெர் ஆப் பர்த் (ஜெபிரே ஆர்செர்)
பால்ஸ் இம்ப்ரேசன் (ஜெபிரே ஆர்செர்)
தி காலெர் (அலெக்ஸ் பார்க்லே)

Comments

coolzkarthi said…
ஹி ஹி ஹி அப்படியே அந்த நாவல்களை எல்லாம் தமிழாக்கம் செய்திருக்கிறார்களா என்று சொல்லவும்...
siddhan said…
//ஹி ஹி ஹி அப்படியே அந்த நாவல்களை எல்லாம் தமிழாக்கம் செய்திருக்கிறார்களா என்று சொல்லவும்...//

அடேய் மருமகனே! சோம்பேறிப் பயலே! ஒழுங்கா உட்காந்து இந்த நாவல் எல்லாத்தையும் இங்கிலிஷ்லையே படிக்கிற. அடுத்தமுற உன்ன நான் பார்க்கும்போது அதுல இருந்து கேள்வி கேட்பேன்.

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)