மை டியர் குட்டிச்சாத்தான்

குட்டிச்சாத்தான். குறும்பு செய்யும் குழந்தைகளை இப்படி "அன்புடன்" அழைப்பது நமது வழக்கம்.நான் அடிக்கடி இத்த வார்த்தையை உபயோகிப்பேன்.எனது அக்கா மகனை இப்படித்தான் கூப்பிடுவேன்.அவன் சரியான அறுந்த வால்.ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டான்.அதே சமயம் பெரிய ஆட்களையும் அப்படி அழைப்பேன். எங்கள் அலுவலகத்தில் எனக்கு அடுத்த இருக்கையில் அமரும் நபரை இப்படி சொல்லி திட்டுவேன்.அவனும் இப்படித்தான். எப்போது பார்த்தாலும் எதாவது விஷமம் பண்ணிக் கொண்டு இருப்பான். குறும்பு செய்பவர்களை ஏன் குட்டிச்சாத்தான் என்று அழைக்கிறோம்?யார் இந்த குட்டிச்சாத்தான்? இப்படி எல்லாம் உட்கார்ந்து யோசித்ததன் விளைவே இந்த பதிவு.

குட்டிச்சாத்தான் பற்றி நிறைய கதைகள். மை டியர் குட்டிச்சாத்தான் படம் நிறைய பேர் பார்த்திருப்பார்கள்.அதில் குட்டிச்சாத்தான் குழந்தைகளின் நண்பன் எனக் காண்பித்திருப்பார்கள்.கேரளா மாந்திரீகத்தில் குட்டிச்சாத்தான் ஒரு அங்கம்.எனது நண்பர் ஒருவரிடம் கேட்டபோது அவர் , சாத்தன் என்றால் சிவன் என்றும், குட்டிச்சாத்தான் சிவனின் ஒரு அம்சம் என்றும் சொன்னார். குட்டிச்சாத்தான் பூஜை செய்து அதன் அருள் கிடைத்தால் நிறைய ஜல்ஜல்ஜமைக்கா(ஹி ஹி அப்படி என்றால் சித்து வேலைகள்) வேலை செய்யலாம் என்று எனது தந்தை சொல்வார்.நமது ஜாதகம் அல்லது கைரேகை பார்க்காமல் நமது முகம் பார்த்தே நம்மை பற்றி சொல்லும் ஜோதிடர்கள் உண்டு.அவர்கள் எல்லாம் குட்டிச்சாத்தான் பூஜை செய்பவர்கள் தான் என்று அவர் சொன்னார்.நான் கூட எனது கல்லூரிப் பருவத்தில் அப்படி ஒரு ஜோதிடரைப் பார்த்திருக்கிறேன். அது செமஸ்டர் தேர்வு சமயம்.அதனால் நானும், எனது நண்பனும் இன்னொரு நண்பனின் அறைக்கு சென்றிருந்தோம்.அங்கு நாங்கள் படித்துக் கொண்டு இருந்தபோது (என்ன சிரிக்கறீங்க? அட உண்மை தாங்க, நம்புங்க) ஒரு ஆள் வந்தார்.தன்னை ஜோதிடர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த அறைக்கு சொந்தக்கார நண்பன் கடவுள் நம்பிக்கை அற்றவன்.அதனால் அவன் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான்.இன்னொருவனுக்கோ அப்போது ஏகப்பட்ட பிரச்சனைகள்.அதனால் அவன் பார்க்கிறேன் என்று சொன்னான். அந்த சோதிடர் எங்கள் இருவரையும் வெளியில் இருக்க சொன்னார்.பிறகு ஒரு இருபது நிமிடம் கழித்து நண்பன் வந்து எங்களை அழைத்தான்.அவர் எதோ பரிகாரம் செய்ய சொன்னார் என்றான்.அந்த ஜோதிடர் உடனே என்னை பிடித்து கொண்டார்."உங்களுக்கும் சொல்கிறேன், கேளுங்கள் கேளுங்கள்" என்று ஒரே தொல்லை.நான் "இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.ஆளை விடுங்கள்" என்றேன்.அவர் கேட்கவில்லை."சரி.நீங்கள் கை காட்ட வேண்டாம்.உங்கள் முகம் பார்த்தே சொல்கிறேன்.அதன் பிறகு நீங்கள் என்னை நம்புவீர்கள்" என்றார்.பிறகு "உங்கள் முதுகில் இந்த இடத்தில் ஒரு மச்சம் உள்ளது.சரியா?" என்றார்.நான் உடனே "முதுகில் உள்ள மச்சம் எல்லாம் எனக்கு எப்படி தெரியும்?" என்றேன்.அவர், "சரி.சட்டையை கழட்டுங்கள்.உங்கள் நண்பர்களே சொல்லட்டும்" என்றார்.நானும் சட்டையை கழட்டினேன்.எனது நண்பர்கள் பார்த்துவிட்டு "ஆமாம்.சரிதான்" என்றார்கள்.எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும் நான் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.அதன் பிறகும் அவர் விடாமல் என்னுடைய எதிர்காலம் பற்றி சில விசயங்களை சொன்னார்.(அந்த ஆள் சொன்ன எல்லாம் அதன் பிறகு சில வருடங்களில் நடந்தது.) அதேபோல் என் நாத்திக நண்பனின் முகம்பார்த்து "நீங்கள் யாருக்கும் அடங்க மாட்டீர்கள்.உங்களுக்கு தோணியதை தான் செய்வீர்கள்" என்றார்.அது நூறு சதவிகிதம் உண்மை.பிறகு தொடர்ந்து "உங்கள் திருமணம் திடீர் திருமணம் தான்" என்றார்.(அவன் அடுத்த சில வருடங்களில் அவன் காதலித்த பெண்ணை திடீரென்று ஒருநாள் ரிஜிஷ்தரார் ஆபிசில் வைத்து திருமணம் செய்து கொண்டான்). இப்போது அதை எல்லாம் நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

குட்டிச்சாத்தான் பற்றிய சுவாரசியமான விசயங்களும் உண்டு.இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது.இவை நான் கேள்விப்பட்டவை. குட்டிச்சாத்தான் எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்.அதை அடிமையாய் வைத்திருப்பவர்கள் அதற்கு ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.இல்லாவிடில் அது அவர்களை தொல்லை செய்யுமாம்.அதனால் மாந்திரீகர்கள் அதனை கடற்கரையில் உள்ள மண்ணை எண்ண சொல்லிவிடுவார்களாம். அதுவும் உட்கார்ந்து எண்ணுமாம்.அதற்கு எருமை மாடு என்றால் ரொம்ப பிடிக்குமாம்.அதனால் அது எருமை மாட்டுக் கொம்பில் ஊஞ்சல் போல அடிக் கொண்டு வருமாம்.இதுபோல இன்னும் பல.

அதனால் இனிமேல் நீங்கள் யாரையாவது குட்டிச்சாத்தான் என்று திட்டும் முன் இதை எல்லாம் சிந்தித்து பார்க்குமாறு அன்புடன் கேட்டு எனது சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.நன்றி.வணக்கம்.

Comments

உங்களை நல்ல ஒரு குட்டிச்சாத்தான் பிடிச்சு ஆடிட்டிருக்குன்னு நினைக்கிறேன்.
மழைச்ச்சித்தன் யார் எதைச்சொன்னாலும் நம்புறார்யா... இவரு ரொம்ப நல்லவருய்யா.!!!
coolzkarthi said…
ஆஹா மாம்ஸ்,வேற என்ன சொன்னார் உங்கள பத்தி ...
நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
thevanmayam.blogspot.com
SQL Sensei said…
ப்ளோக் மிகவும் அருமை.
ஒரு உபரி செய்தி :- இவர் மனைவியும் குட்டி சாத்தான் என்றே அழைப்பார்.
// coolzkarthi said...
ஆஹா மாம்ஸ்,வேற என்ன சொன்னார் உங்கள பத்தி ...//

இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி.. அவர் சொன்ன மத்த விஷயம் எல்லாம் சென்சார் பண்ணியாச்சு..

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)