நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள்

நாஸ்ட்ரடாமஸ் எழுதிய வருங்காலத்தை பற்றிய ஆரூடங்கள் இன்றளவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. நாஸ்ட்ரடாமஸ் 1503ம் வருடம் பிரான்ஸில் பிறந்தார்.படிப்பில் சிறந்து விளங்கிய அவர் கல்லூரியில் மருத்துவம் பயின்று சிறந்த மருத்துவராக திகழ்ந்தார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த அவர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அதே பிளேக் நோயால் இழந்தார்.இதனால் மிகுந்த வருத்தம் அடைந்த அவர் இத்தாலி மற்றும் பிரான்ஸில் சுற்றித் திரிந்தார். இந்த சமயத்தில் தான் அவர் தன்னிடம் இருந்த வருங்காலத்தைப் பற்றி அறியும் திறமையை உணர்ந்தார். நாஸ்ட்ரடாமஸ் இத்தாலியில் இருந்தபோது ஒரு நாள் சாலையில் சில மதகுருமார்கள் அவரைத் தாண்டி சென்றார்கள். அப்போது அவர் திடீரென்று அவர்களில் ஒருவரின் காலில் விழுந்தௌ வணங்கினார். மற்றவர்கள் ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு அவர், "புனிதமான இந்த மனிதரை நான் வணங்குகிறேன்" என்றார். அவரால் வணங்க்கப்பட்ட அந்த மனிதர்தான் பிற்கால்த்தில் போப் ஐந்தாம் சிக்ஸ்டஸ் ஆனார்.
நாஸ்ட்ரடாமஸ் 1547ம் வருடம் மறுமணம் செய்துகொண்டு சலோன் நகரில் வசிக்கத் தொடங்கினார்.1555ம் வருடம் வருங்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளைப் பற்றி பத்து புத்தகங்கள் எழுதினார்.ஒவ்வொரு தொகுதியும் 100 ஆரூடங்களை கொண்டது. நெப்போலியனின் எழுச்சி பற்றி அவர் எழுதியது: "இத்தாலியின் அருகே ஒரு அரசன் பிறப்பான்.அவன் ஒரு அரசனைவிட ஒரு கசாப்பு கடைக்காரனைப் போல் செயல்படுவான்." நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்பு குறித்து அவர் எழுதியது: " ஒரு பெரும்படை ரஸ்யாவில் நுழையும். அந்த படை ஒரு நகரத்தை அழிக்கும்." ரஷ்யாவின் கடும்குளிரில் சிக்கி நெப்போலியனின் படைகள் தடுமாறியது பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்: " வெண்மையான் அந்த பகுதியில் போரிடும் அந்த பெரும்படை அழியும்". -தொடரும்

Comments

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)