தமிழர்களும்,இட்லியும்

தமிழர்களின் வாழ்வில் இட்லி எவ்வாறு நீக்கமற கலந்துள்ளது என்று நினைத்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது.வெளி நாடு செல்லும் மனிதர்கள் கூட அங்கு அரிசி கிடைக்குமா? மாவு கிடைக்குமா? என்று விசாரிப்பதை காணலாம்.தூங்கா நகரமான மதுரை இட்லிக் கடைகளுக்கு பெயர்போனது. நான் மதுரைக்காரன் என்பதில் எனக்கு எப்போதுமே ஒரு பெருமை உண்டு.அங்கு நான் படித்தபோது நிறைய கையேந்திபவன்களில் இட்லியை ரசித்து,ருசித்து சாப்பிட்டிருக்கிறேன். நீங்கள் சாப்பிடுவது இரண்டே இட்லியாய் இருந்தாலும் கூட அதற்கு நான்கு வகை சட்னி தருவார்கள். நினைத்துப் பார்த்தால் இப்பொழுதும் அந்த ருசி நாவில் தெரிகிறது. சென்னைக்கு வந்த பிறகு அப்படி ருசியான இட்லி எங்காவது கிடைக்காதா என்று ஏங்கியபோது ஆபத்பாந்தவனாய் அமைந்தது 'முருகன் இட்லிக்கடை'.என்ன ஒரு ருசி. இதுவரை இரண்டேமுறை தான் அங்கு சாப்பிட்டிருக்கிறேன்.அடுத்து, சரவணபவன் மினி இட்லி. நெய்மணக்க தருவார்கள்.விலை அதிகம் என்றாலும் கொடுத்தகாசுக்கு திருப்தியாக சாப்பிட்டுவிட்டு வரலாம். மயிலாப்பூரில் ஒரு வீட்டில் இருந்து தினமும் இட்லியை மலேசியா, சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்கிறார்களாம்.இப்படி பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் இட்லியை நாம் கொண்டாடுவதில் வியப்பேதும் இல்லைதான்.

Comments

Unknown said…
Your opinion about idli is 100% correct. Our people will never, ever miss idli.

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)