எனது பெரியப்பா வீட்டிற்கு சென்றபோது நிகழ்ந்த ஒரு சம்பவம்.இன்றுவரை எனது பெரியப்பா அதை சொல்லி சிரிப்பார்.ஒருமுறை அவர் வீட்டிற்கு சென்றிருந்தபோது சுச்சா போவதற்காக கழிவறைக்கு சென்றேன். அங்கு சுவர் திட்டில் ஒரு டப்பா இருந்தது.அதில் "அமிர்த வெண்ணெய்" என்று பெயர் வேறு எழுதியிருந்தது.எனக்கு ஒன்றும் புரியவில்லை. வெண்ணெய் தெரியும், இது என்னடா அமிர்த வெண்ணெய் என்று ஒரு குழப்பம்.அடுத்த சந்தேகம் வெண்ணெய்யை எதற்காக கழிவறையில் வைத்திருக்கிறார்கள் என்பது.உடனே அந்த டப்பாவை கையில் எடுத்துக்கொண்டு என் பெரியப்பாவிடம் சென்றேன்."என்ன பெரியப்பா! இதில் அமிர்த வெண்ணெய் என்று எழுதியிருக்கிறது.ஆனால் இதைப் போய் யாரோ கக்கூசில் வைத்திருக்கிறார்கள். நான் கொண்டு போய் சமையலறையில் வைத்துவிடட்டுமா?" என்றேன். அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.விழுந்து,விழுந்து சிரித்தார்.பிறகு, "அடேய்! இது சாப்பிடும் வெண்ணெய் இல்லை. இது ஆயுர்வேத மருந்து.எனக்கு மூலநோய் இருப்பதால் அதற்கு வெளியே தடவும் மருந்து.நல்லவேளை என்னைக் கேட்டாய்." என்று சொல்லி சிரித்தார்.அதில் இருந்து என்னை பார்க்கும் போதெல்லாம் அதை சொ...
குருசேத்திர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் தீவிரமாய் போர் செய்து கொண்டிருக்கிறார்கள். கவுரவர் அணியில் இருந்து துரோணர் உக்கரமாய் போர் செய்கிறார். துரோணர் சிறந்த வீரர். அவரை போரிட்டு வெல்ல முடியாது என்பது பகவான் கிருஷ்ணனுக்கு தெரியும்.எனவே துரோணரை தந்திரமாக வீழ்த்த எண்ணுகிறார். துரோணரின் ஒரே பலவீனம் அவரது மகன் அஸ்வத்தாமன் மீது அவருக்குள்ள பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் துரோணர் தவித்துப் போய்விடுவார் என்று கணக்கு போடுகிறான் கிருஷ்ணன். உடனே கிருஷ்ணன் தருமரை அழைத்து சொல்கிறான் " தருமா! துரோணரை போரில் வீழ்த்த உங்களால் இயலாது. எனவே நான் ஒரு உபாயம் சொல்கிறேன். அதன்படி செய்" என்கிறான். தருமர் உடனே ,"சொல் கிருஷ்ணா" என்கிறார்.கிருஷ்ணன் சொல்கிறான் " தருமா! துரோணருக்கு தன் மகன் அஸ்வத்தாமன் மீது அளவு கடந்த பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் இவர் துடித்துப் போய்விடுவார்.அந்த நேரத்தில் நாம் அவரை வீழ்த்திவிடலாம். அதனால் நீ இப்போது "அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்" என்று சத்தம் போட்டு சொல்.அதை கேட்டவுடன் அவர் போரை நிறுத்திவிடுவார். பிறகு அ...
கிருஷ்ணன் இல்லாமல் பாண்டவர்கள் போரில் ஜெயித்திருக்க முடியாது என்பது மஹாபாரதம் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.பாரதப்போரில் அர்ஜுனனின் சாரதியாக இருந்து அவனை பல அபாயங்களில் இருந்து கிருஷ்ணன் தான் காப்பாற்றுகிறான். அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் போர் உக்கிரமாக நடக்கிறது.அப்போது அர்ஜுனன் எய்யும் அம்பு பட்டு கர்ணனின் தேர் பல அடி தூரம் தள்ளி செல்கிறது.அப்போது கிருஷ்ணன் புன்னகைக்கிறான் . பதிலுக்கு கர்ணன் எய்யும் அம்புபட்டு அர்ஜுனன் தேர் சில அடி தூரம் பின்னால் செல்கிறது.அதற்கு கிருஷ்ணன் "ஆஹா! பிரமாதம்" என்று பாராட்டுகிறான். நமது அர்ஜுனனுக்கோ எரிச்சல்.கிருஷ்ணனை பார்த்து "கிருஷ்ணா! என்ன கொடுமை இது! என் அம்பு வீச்சு கர்ணன் தேரை பல அடி பின்னால் தள்ளும்போது நீ வெறுமனே சிரிக்கிறாய்.அதுவே அவன் அம்பு நம் தேரை சில அடி தள்ளினால் அவனை பாராட்டுகிறாய்.ஏன்?" என்கிறான். கிருஷ்ணன் புன்னகைத்து சொல்கிறான், "அர்ஜுனா! உனது தேரின் கொடியில் பராக்கிரமசாலியான அனுமன் இருக்கிறான்.சாரதியாக நான் இருக்கிறேன்.அப்படி இர...
Comments
by ur marumagan