எனது பெரியப்பா வீட்டிற்கு சென்றபோது நிகழ்ந்த ஒரு சம்பவம்.இன்றுவரை எனது பெரியப்பா அதை சொல்லி சிரிப்பார்.ஒருமுறை அவர் வீட்டிற்கு சென்றிருந்தபோது சுச்சா போவதற்காக கழிவறைக்கு சென்றேன். அங்கு சுவர் திட்டில் ஒரு டப்பா இருந்தது.அதில் "அமிர்த வெண்ணெய்" என்று பெயர் வேறு எழுதியிருந்தது.எனக்கு ஒன்றும் புரியவில்லை. வெண்ணெய் தெரியும், இது என்னடா அமிர்த வெண்ணெய் என்று ஒரு குழப்பம்.அடுத்த சந்தேகம் வெண்ணெய்யை எதற்காக கழிவறையில் வைத்திருக்கிறார்கள் என்பது.உடனே அந்த டப்பாவை கையில் எடுத்துக்கொண்டு என் பெரியப்பாவிடம் சென்றேன்."என்ன பெரியப்பா! இதில் அமிர்த வெண்ணெய் என்று எழுதியிருக்கிறது.ஆனால் இதைப் போய் யாரோ கக்கூசில் வைத்திருக்கிறார்கள். நான் கொண்டு போய் சமையலறையில் வைத்துவிடட்டுமா?" என்றேன். அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.விழுந்து,விழுந்து சிரித்தார்.பிறகு, "அடேய்! இது சாப்பிடும் வெண்ணெய் இல்லை. இது ஆயுர்வேத மருந்து.எனக்கு மூலநோய் இருப்பதால் அதற்கு வெளியே தடவும் மருந்து.நல்லவேளை என்னைக் கேட்டாய்." என்று சொல்லி சிரித்தார்.அதில் இருந்து என்னை பார்க்கும் போதெல்லாம் அதை சொ...
Comments
உன் நினைவுகளால் கலைந்துகிடக்கும்
என் மனம்!!!//
ஆஹா! நன்றாக இருக்கிறது என் அருமை மாம்ஸ்...(கலர் கலரா கணுவு வருது போல)
எனக்கும் இப்படி எழுத கத்து கொடுத்தால் பரவாஇல்லை ,ஹ்ம்ம்ம்ம்ம் உக்காந்து யோசிச்சிங்களோ?
உன் நினைவுகளால் கலைந்துகிடக்கும்
என் மனம்!!!//
நன்றாக இருக்கிறது இந்த வரிகள்