பலகாரம், ஜாக்கிரதை!!!

தீபாவளியை அவ்வளவு விமரிசையாய் கொண்டாட மாட்டோம் என்று சென்ற பதிவில் பகுமானமாய் சொல்லிவிட்டேன். ஆனாலும் இந்த தீபாவளி பலகாரம் சாப்பிடாமல் இருக்க முடியுமா? ஹிஹி. வளரும் பிள்ளை என்பதால் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டேன்.அது என்னடாவென்றால் வயிற்றை கடமுட என்று என்னவோ பண்ணுகிறது. எனது அக்கா வேறு "முன்யோசனை இல்லாமல் சாப்பிட்டால் இப்படித்தான் 'பின்விளைவுகள்' இருக்கும்" என்று சொல்லி ஓட்டிக் கொண்டிருக்கிறாள். எனக்கு இந்த இங்கிலீஷ் மருந்துகள் அவ்வளவாய் கேட்காது.அதனால் வீட்டில் இருந்த ஓமத்திரவத்தை தண்ணிரில் கலந்து குடித்தேன். அதன்பிறகு வயிறு பரவாயில்லாமல் இருக்கிறது. அப்படியும் எங்கள் வீட்டில் என்னை விட்டார்களா என்றால் அதுதான் இல்லை. இன்று ஊருக்கு கிளம்புகிறேன் என்று வீட்டில் உள்ள பலகாரங்களை எல்லாம் மூட்டைகட்டி தயாராக வைத்துள்ளார்கள்.எதற்கு என்று கேட்டால் "இங்கு இதை எல்லாம் சாப்பிட ஆள் இல்லை. நீ கொண்டு போய் உனது நண்பர்களுக்கு கொடு" என்று பதில் வேறு. ஹ்ம்ம்.விதி யாரைவிட்டது.இந்த பதிவை எனது நண்பர்கள் படிக்கும்முன் இந்த பலகாரங்களை அவர்கள் தலையில் கட்டிவிட வேண்டும்.அதற்குமுன் இந்தப் பதிவை படிக்கும் என் நண்பர்கள் தயவு செய்து மற்ற நண்பர்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Comments

coolzkarthi said…
என்னை உட்டுட்டு சாப்பிட்டா இப்படித்தான்...சரி சரி இப்பவாவது கட முட சத்தம் நின்னுதா ,அத்தை பயந்துட போறாங்க...
Sanjai Gandhi said…
ஹாஹா.. நல்ல பதிவு.. எங்க அம்மா கூட அப்டித்தான்.. என் பையில் பாதியை நிரப்பி அனுப்பிட்டாங்க.. நல்ல வேளையாக என் நன்பனும் அவன் மனைவியும் ரயிலில் என்னிடம் மாட்டினார்கள். மொத்தமும் அவர்கள் தலையில் கட்டிவிட்டேன்.. :))
Unknown said…
ha ha ha nan chennai varamatteyney...palakaram mudichathum sollunga...
siddhan said…
பொடியன் அவர்களே! தங்கள் வருகைக்கு நன்றி! பாவம் உங்கள் நண்பரும், அவர் மனைவியும் :)

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)