நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவு!
கடும் பணிச்சுமையின் காரணமாக ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.இன்றாவது நேரம் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.வாழ்க்கை வழக்கம்போல் செல்கிறது.பெரும்பாலான நேரங்களில் என்ன செய்கிறோம்,வாழ்க்கையின் லட்சியம் என்ன என்று நினைப்பேன்.ஏதோ பொழுது விடிகிறது,அலுவலகம் செல்கிறோம்,வீடு திரும்புகிறோம்,உறங்குகிறோம், அடுத்த நாள் இதே கதைதான்.(மறுபடியும் மொதல்ல இருந்தா?) என்னவோ போங்க.வாழ்வின் மீதான தீரா காதல் மனிதர்களை தொடர்ந்து இயங்க வைக்கிறது.இல்லையென்றால் அவனவன் சலித்துபோய் "போங்கடா! இந்த ஆட்டைக்கு நான் வரல!" என்று ஓடி விடுவான்.கும்பமேளாவில் குவியும் சாமியார்களை பார்க்கும் போது எல்லாம் எனக்கு இது தான் தோன்றும்.ஒருமுறையாவது காசி, கங்கை என்று கண்ணால் பார்க்க வேண்டும் என்று ஆசை.எனது நண்பன் ஒருவன் "வைஷ்ணோதேவி போய்வரலாம்" என்று அழைக்கிறான்.அதற்கு இன்னும் வேளை வரவில்லை.
Comments