கா.மாவிலிருந்து, செ.மாவிற்கு ஒரு பயணம்!
எனது மச்சினன் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் அப்படியே எனது அக்கா வீட்டிற்கும் செல்வது எங்களது வழக்கம்.காரணம் இரண்டு வீடுகளும் ஒரே பகுதியில் உள்ளன.சென்றமுறை அவ்வாறு செல்லும்போது , வழியில் சுவற்றில் தெருவின் பெயர் எழுதி , கீழே செ.மா என்று போட்டிருந்தது,எனது மனைவி அதை பார்த்துவிட்டு "அதென்னங்க! செ.மா?" என்று கேட்டாள். நான் உடனே எனது கிட்னியை கசக்கிபிழிந்து "சென்னை மாவட்டம்" என்றேன்.உடனே அவள் , "அப்படின்னா நாம கா.மாவில் இருக்கிறோமா?" என்றால்."என்னது? கா.மாவா? பேரே செரியில்லயே" என்றேன் நான்.அவள் தெளிவாக, "ஆமா! நம்ம ஏரியா காஞ்சிபுரம் மாவட்டம் தானே?" என்றாள்.இருவரும் சிரித்தோம்.அதன்பிறகு எப்போது எனது அக்கா வீட்டிற்கு சென்றாலும்,"கா.மாவிலிருந்து, செ.மாவிற்கு ஒரு பயணம்" என்று விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சி அறிவிப்பு போல சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.
Comments