Posts

Showing posts from 2009

மகாபாரதத்தில் உள்ள செய்தி

மகாபாரதத்தில் நிறைய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. யாரையும் இழிவாக கருதி அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை பின்வரும் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. பாரதப்போர் நடந்து கொண்டிருக்கிறது.அர்ஜுனனை கொல்ல கர்ணன் நாகாஸ்திரத்தை நிச்சயம் பயன்படுத்துவான் என்று கிருஷ்ணனுக்கு தெரியும்.அதனால் அதற்கு முன்பே அவர் குந்தியிடம் கர்ணன் பாண்டவர்களில் மூத்தவன் என்பதை சொல்லிவிடுகிறார்.அது மட்டுமல்ல இதை கர்ணனிடம் போய் சொல்லுமாறும், கூடவே அவனை கவுரவர்களை விட்டு பிரிந்து பாண்டவர் அணியில் சேருமாறு கேட்கவும் சொல்கிறார். அதற்கு அவன் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருதடவைக்கு மேல் பிரயோகிக்காமல் இருக்க அவனிடம் வரம் வாங்குமாறும் கூறுகிறார்.குந்தியும் உடனே கர்ணனை சென்று பார்த்து தான்தான் அவன் தாய் என்று சொல்லி அழுகிறாள்.கர்ணன் இதைக் கேட்டு மகிழ்கிறான்.பிறகு குந்தி அவனை பாண்டவர் அணியில் சேர நிர்பந்திக்கிறாள். அதற்கு கர்ணன் உறுதியாக மறுத்துவிடுகிறான்.அதனால் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருதடவைக்கு மேல் பிரயோகிக்காமல் இருக்க வேண்டும் என்று அவனிடம் குந்தி கேட்க அவனு...

ஓடுங்க!!! திங்கள் கிழமை வருது!!!

சனி, ஞாயிறு கிழமைகள் வருவதும் தெரிவதில்லை. போவதும் தெரிவதில்லை. இந்த இரண்டு நாட்களுக்காக நாம் ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.இருந்தும் ஒரு புண்ணியமும் இல்லை.வெள்ளிக்கிழமை பொழுது விடியும்போதே ஒரே குஜாலாக இருக்கும்.பொழுதுபோய் மாலை ஆனால் இன்னும் சந்தோசம். சினிமா போபவர்கள், நண்பர்களை பார்க்க போபவர்கள் , வெளியே சுற்றுபவர்கள் என்று ஒரே குஷி தான்.சனிக்கிழமையும் சந்தோசமாக போகும். ஞாயிறு வந்தவுடன் மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நினைப்பே கடுப்பைக் கிளப்பும். ஞாயிறு மாலை வந்தால் கடுப்பு இன்னும் கூடும். திங்கள் காலை கேட்கவே வேண்டாம். ஒரு லிட்டர் விளக்கெண்ணை குடித்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு அலுவலகம் கிளம்ப வேண்டியது தான். பள்ளிப் பருவத்தில் தான் திங்கள் கிழமை வில்லனாக இருந்தது என்றால் இப்போதும் அப்படிதான் இருக்கிறது. என் மனைவியை சென்ற திங்கள் கிழமை அலுவலகம் அனுப்ப அவர்கள் அலுவலக பேருந்து வழக்கமாக நிற்கும் இடத்தில் நின்றிருந்தேன். அந்த இடத்தில் ஒரு சிறுவர் கூட்டம். ஏதோ ஒரு பள்ளி பேருந்திற்காக அவர்கள் தத்தமது பெற்றோருடன் நின்றிருந்தனர். அதில் ஒரு சிறுமி அழு அழு என்று அழுது தீர்த...

எருமைச்சாணி வைத்தியம்

ஒரு ஊரில் ஒரு வைத்தியர் இருந்தார். அவர் ஒருவர் தான் அந்த சுற்றுவட்டாரத்திற்கே ஒரே வைத்தியர் என்பதால் எப்போதும் அவரைக் காண மக்கள் வந்த வண்ணம் இருப்பார் .அவருக்கு இதனால் நல்ல வருமானம்.விதி யாரை விட்டது. வைத்தியருக்கு அது ஒரு ஆப்பு வைத்தது. அது என்னவென்றால் வெளியூரில் இருந்து அந்த ஊருக்கு ஒரு புது வைத்தியன் வந்து சேர்ந்தான். வந்த கொஞ்ச நாளிலேயே கைராசிக்காரன்,கெட்டிக்காரன் ,எந்த வியாதியையும் குணப்படுத்துவான் என பெயர் வாங்கிவிட்டான் அந்த புது வைத்தியன். இதனால் ஊர் மக்கள் எல்லோரும் அவனிடமே சென்று வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார்கள் .நம்ம பழைய வைத்தியனுக்கு(இனிமேல் புது வைத்தியனை பு.வை என்றும் பழைய வைத்தியனை ப.வை என்றும் சுருக்கமாக சொல்கிறேன்) இதனால் டப்பா டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டது. இப்படியே போனால் டேராவை தூக்கிக்கொண்டு வேற ஊர் தான் பார்க்கணும் அதனால் இதற்கு ஒரு முடிவு கட்டுவோம் என்று நம்ம ப.வை கிளம்பினார். கிளம்பியவர் நேரே பு.வை வீட்டிற்கு சென்றார்.பு.வியிடம் "எனக்கு ஒரு விசித்திர வியாதி உள்ளது. நீங்கள் தான் எப்படியாவது அதை குண...

தேர்தல் திருவிழா!

இந்த தேர்தல் ஒரே காமெடி தான் போங்கள்.இந்த அணியில் இருப்பவர் அந்த அணி மாறுவதும், நேற்று வரை கொஞ்சியவர்கள் இன்று ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசுவதும் , ஆகா! நல்ல பொழுதுபோக்கு.இந்த அணி, அந்த அணி என்று ஒரு அணிக்கும் மத்தியில் பெரும்பான்மை கிடைக்காது என்று வேறு அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்(தேர்தல் பார்வையாளர்கள் சரி , இது என்ன அரசியல் பார்வையாளர்கள்?) இரண்டு அணி போதாது என்று ஒரு மூன்றாவது அணி.இந்த மூன்றாவது அணி பிடிக்காமல் ஒரு நான்காவது அணி.அப்பப்பா! ஒரே தலை சுற்றல்.நான்கு கட்ட தேர்தல் முடிந்துவிட்டது.இன்னும் ஒரு கட்ட தேர்தல் தான் பாக்கி.அடுத்த வெள்ளியன்று தெரிந்துவிடும் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்று.அதுவரை ஒரு பரபரப்பு, ஒரு விறுவிறுப்பு என நாட்கள் கழிகின்றன.யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு ஒன்றும் ஒருப்படியாக செய்யப் போவதில்லை.இதற்கு கோடிக்கணக்கில் செலவு நடக்கிறது.இந்த 49-0 வை தேர்தல் எந்திரத்தில் சேர்த்தால் நிறைய பேர் அதைத்தான் தேர்வு செய்வார்கள் என்பது என் கணிப்பு.பார்ப்போம், அடுத்த ஆட்சி யார் கையில் என்று.

ஒரு ஜென் கவிதை!!!

பட்டாம்பூச்சிகள் அன்போடு தொடர்கின்றன மலர்வளையம் சவப்பெட்டியின் மீது கிடத்தப்பட்டு இருக்கிறது!!! படித்துவிட்டு சிறிது நேரம் அப்படியே பிரமித்து நின்றேன்.என்ன ஒரு அபாரமான கவிதை!

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

குருசேத்திர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் தீவிரமாய் போர் செய்து கொண்டிருக்கிறார்கள். கவுரவர் அணியில் இருந்து துரோணர் உக்கரமாய் போர் செய்கிறார். துரோணர் சிறந்த வீரர். அவரை போரிட்டு வெல்ல முடியாது என்பது பகவான் கிருஷ்ணனுக்கு தெரியும்.எனவே துரோணரை தந்திரமாக வீழ்த்த எண்ணுகிறார். துரோணரின் ஒரே பலவீனம் அவரது மகன் அஸ்வத்தாமன் மீது அவருக்குள்ள பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் துரோணர் தவித்துப் போய்விடுவார் என்று கணக்கு போடுகிறான் கிருஷ்ணன். உடனே கிருஷ்ணன் தருமரை அழைத்து சொல்கிறான் " தருமா! துரோணரை போரில் வீழ்த்த உங்களால் இயலாது. எனவே நான் ஒரு உபாயம் சொல்கிறேன். அதன்படி செய்" என்கிறான். தருமர் உடனே ,"சொல் கிருஷ்ணா" என்கிறார்.கிருஷ்ணன் சொல்கிறான் " தருமா! துரோணருக்கு தன் மகன் அஸ்வத்தாமன் மீது அளவு கடந்த பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் இவர் துடித்துப் போய்விடுவார்.அந்த நேரத்தில் நாம் அவரை வீழ்த்திவிடலாம். அதனால் நீ இப்போது "அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்" என்று சத்தம் போட்டு சொல்.அதை கேட்டவுடன் அவர் போரை நிறுத்திவிடுவார். பிறகு அ...