இது அப்ரைசல் நேரம்!!!
அப்ரைசல் என்கிற சம்பள உயர்வு, பணியாளர்களை படாதபாடு படுத்துகிறது. வருடத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வளிக்கும் நிறுவனம் என்றால் தப்பித்தோம். சில நிறுவனங்களில் இரண்டுமுறை உயர்த்துவார்கள். அந்த நிறுவன பணியாளர் பாடு திண்டாட்டம்தான். ஏன் என்றால் இந்த அப்ரைசல் என்பது சாதாரண விஷயம் இல்லை. சென்ற வருடம் நீ என்ன சாதித்து கிழித்தாய் என்பதை நாசுக்கான வார்த்தைகளில் கேட்பார்கள்.நாம் அதற்கு பக்கம், பக்கமாக விளக்கம் அளிக்க வேண்டும். நாம் ஒன்றும் ஒருப்படியாக கிழிக்காவிட்டாலும் சும்மா அள்ளி விடவேண்டும் .அப்போதுதான் எட்டு சதவீதமோ, பத்து சதவீதமோ உயர்வு இருக்கும். இல்லையென்றால் "உனக்கு இப்போது கொடுப்பதே ஜாஸ்தி, கொய்யால! கொடுக்கறது வாங்கிட்டு கம்னு கெட" என்று சொல்லிவிடுவார்கள்("நாசுக்கான வார்த்தைகளில்"). எனவே சனி, ஞாயிறு கிழமைகளில் கூட ரூம் போட்டு யோசித்தாவது எதையாவது அந்த படிவத்தில்(எல்லாமே online தான்) நிரப்ப வேண்டும். ...