The Way Back - ஒரு பார்வை
சென்ற சனிக்கிழமை , "The Way Back" என்ற ஆங்கில படத்திற்கு நானும் , எனது அலுவலக நண்பர்களும் சென்றிருந்தோம்.வழக்கம் போல எனக்கு பிடித்த ஐநாக்ஸ் திரையரங்கு தான்.சிட்டி சென்டரில் உள்ள லேண்ட்மார்க் புத்தக கடைக்காகவே நான் எப்போதும் ஐநாக்சை தேர்வு செய்வேன்.படம் ஆரம்பிப்பதற்கு முன் சிறிது நேரம் லேண்ட்மார்க்கில் சுற்றலாம்.நிறைய தமிழ் , ஆங்கில புத்தகங்களை வாங்கலாம்.சரி விசயத்திற்கு வருவோம். நாங்கள் உள்ளே நுழையும்போது விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது.எல்லாமே செம மொக்க விளம்பரங்கள். அவற்றை பார்த்தால், அந்த பொருள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவனும் மனம் மாறி விடுவான்.நல்ல வேலை இன்னும் சற்று முன்பாக வரவில்லை என்று நினைத்துக் கொண்டேன். ஒரு வழியாக படம் ஆரம்பித்தது.ஆரம்பித்து ஒரு 15 நிமிடத்தில் எனக்கு அருகில் இருந்து குறட்டை சத்தம்.திரும்பி பார்த்தால் , எனது நண்பர் சின்னா நன்கு தூங்கி கொண்டிருந்த...