சகுனி பற்றி தெரியாத தகவல்கள்
மஹாபாரதத்தில் கண்ணனுக்கு இணையாக ஒரு கதாபாத்திரமாக நாம் சகுனியை கருதலாம். கௌரவர்களின் பக்கம் நின்று துரியோதனனுக்கு பக்கபலமாக இறுதி போர் வரை இருந்தவன் சகுனி. ஆனால் சகுனி உண்மையில் யார்? கவ்ரவர்களின் வெற்றியை விரும்பியவனா? இல்லை என்கிறது அவன் வரலாறு. காந்தாரியின் உடன் பிறந்த சகோதரர்கள் மொத்தம் நூறு பேர்.சில காரணங்களால் அவர்கள் அனைவரும் கௌவரவர்களால் சிறை பிடிப்பிக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சேர்த்து சிறிதளவு உணவே தினமும் வழங்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் சேர்ந்து அனைவரிலும் இளையவனான சகுனியை காப்பாற்ற முடிவெடுக்கிறார்கள். அதன்படி அந்த உணவு அவனுக்கு கொடுக்கப்படுகிறது. சகுனியின் தந்தையின் தொடை எலும்பில் இருந்து செய்யப்பட்டது தான் அவன் வைத்திருந்த பகடை. அதனால் அது அவன் என்ன எண்ணை சொல்கிறானோ அதை தான் காட்டும். இதை வைத்து கௌரவர்களை அவன் எப்படி அழித்தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆக, ஆகாத கௌரவர்களை உறவாடி கெடுத்தவன் சகுனி.
Comments