காசி யாத்திரை

 எனது மற்றும் எனது நண்பர்களின் நீண்ட நாள் கனவு சென்ற மார்ச் மாதத்தில் நனவாகியது. அதுதான் காசி பிரயாணம். சில வருடங்களாக நாங்கள் அதைப்பற்றி பேசி வந்தாலும் அதற்கு வேளை வந்தது இப்போதுதான்( விஸ்வநாதர் அருள் வேண்டுமல்லவா அந்த புண்ய மண்ணை மிதிப்பதற்கு?) பிப்ரவரி மாத இறுதியில் எங்கள் காசி பிரயாண வேட்கை தீவிரமாகி விமான பயணத்திற்கு முன்பதிவு செய்ய முயன்றோம். விமான கட்டணம் மட்டுமே ஒரு லக்ஷம் ரூபாய் அருகில் வந்ததால் திட்டத்தை கைவிட்டோம். பிறகு, நான் சென்ற வருடம் ஷீர்டி அழைத்துச்சென்ற டூர் நிறுவனத்திடம் பேசினேன. அவர்கள் சந்தோசமாக ஒப்பு கொண்டார்கள். பயண கட்டணம் ஒருவருக்கு இருபத்தி இரண்டாயிரம் என்று முடிவாகியது.மொத்தம் பனிரெண்டு பேர் திட்டமிட்டபடி மார்ச் 14 கிளம்பி 17 அன்று சென்னை வந்து சேர்ந்தோம்.

14 மார்ச்:
காலை 9 மணிக்கு கிளம்பி மதியம் 12 மணிக்கு காசி விமான நிலையம் அடைந்தோம். அங்கிருந்து காரில் காசியை அடைய ஒரு மணி நேரம் ஆனது.
தங்கும் விடுதியில் சிறிது நேரம் இளைப்பாறி உணவு உண்டு மாலை சாரநாத் சென்று அங்குள்ள புத்த மத அருங்காட்சியகம் கண்டு ரசித்தோம்
இரவு, நண்பர்கள் கங்கை ஆரத்தி பார்க்க சென்றுவிட, நான் கடும் தலைவலி காரணமாக தங்கும் விடுதியில் தூங்கிவிட்டேன்

15 மார்ச்:
மறுநாள் அதிகாலை 4 மணிக்கு விஸ்வநாதர் கோவில் சென்று மங்கள ஆரத்தியை தரிசித்தோம்.
காலை 8 மணி அளவில் கிளம்பி மதியம் அலகாபாத்தை அடைந்தோம். அங்கு திரிவேணி சங்கமத்தில் ஒரு ஆனந்த குளியல், மாலை மீண்டும் காசி வந்தடைந்தோம்

16 மார்ச்:
காலபைரவர் , சோழிமாதா,விஸ்வநாதர், விசாலாட்சி தரிசனம்
மாலை கங்கை ஆரத்தி
அதற்கு முன்பாக  நானும் எனது நண்பர்களும் பரமஹம்ச யோகானந்தரின் குருவின் குருவும் , மகா அவதார் பாபாஜியின் சீடருமான ஸ்ரீஸ்ரீ லாஹிரி மஹாசயர்  இல்லம் மற்றும் கோவில் சென்றோம்.பிறகு மஹான் த்ரைலங்கர் சமாதி சென்று தரிசித்தோம்.

17மார்ச்:
எனது தந்தை, பெரியப்பா மற்றும் மாமனார் மூவரும்  கங்கை கரையில் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்
மதியம்  காசியில் இருந்து கிளம்பி மாலை சென்னை வந்து சேர்ந்தோம் 

Comments

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)