தானமும் தர்மமும் - கர்ணனின் கதை

 போரில் அர்ஜுனனின் பாணங்களால் வீழ்த்தப்பட்டு கிடக்கிறான் கர்ணன். அவன் செய்த எண்ணிலடங்கா புண்ய செயல்களால் அவன் உயிர் பிரியாமல் இருக்குமாறு தர்ம தேவதை அவனை பாதுகாக்கிறாள். இதை உணர்ந்த கண்ணன் வழக்கம்போல்  தந்திரம் செய்து கர்ணனிடம் அவன் செய்த புண்ய செயல்களின் பலன்களை தனக்கு தானமாக கேட்கிறான். இல்லை என்று சொல்ல மனம் இல்லாத தர்மவான் கர்ணன் அப்படியே செய்கிறான். இந்த விஷயத்தில் அர்ஜுனனுக்கு ஒரு கேள்வி எழுகிறது(அவனுக்கு மட்டும் இல்லை நம்மை போன்ற பலருக்கும் வரும் சந்தேகம் தான்). "கர்ணன் செய்த புண்ணிய செயல்கள் அவன் உயிரை காத்து நின்றன. அப்படி இருக்கையில் அவன் செய்த மொத்த புண்ய செயல்களின் பலனையும் உனக்கு தானமாக கொடுத்தான் என்றால் அந்த தானத்தின் பலன் மிக பெரியது  அப்படி இருக்கையில் அவன் எப்படி இறந்தான்?" என்று கண்ணனிடம் கேட்கிறான். அனைத்தையும் அறிந்த மாயக்கண்ணன் புன்னகையுடன் சொல்கிறான் "கேள் அர்ஜுனா! உலகத்தில் தானம் தர்மம் என்று இரண்டு விஷயங்கள் உள்ளன பிறர் கேட்டு நாம் கொடுப்பது தானம் ஒருவன் கேட்காமலே அவனுக்கு உதவி செய்தல் தர்மம் அதனால் தானத்தை விட தர்மம் உயர்ந்தது , பலன் மிக்கது .நான் கர்ணனிடம் கேட்டு பெற்றது தானம் அதனால் அதன் புண்யபலன்  அவன் உயிரை  காப்பாற்றும் அளவிற்கு பலம்மிக்கது அல்ல".
நீதி: பிறர் தேவை அறிந்து அவர்கள் கேட்காமலே உதவி செய்வதே தர்மம்

Comments

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

இமயத்து ஆசான்கள்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!