Posts

Showing posts from 2006

தமிழர்களும்,இட்லியும்

தமிழர்களின் வாழ்வில் இட்லி எவ்வாறு நீக்கமற கலந்துள்ளது என்று நினைத்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது.வெளி நாடு செல்லும் மனிதர்கள் கூட அங்கு அரிசி கிடைக்குமா? மாவு கிடைக்குமா? என்று விசாரிப்பதை காணலாம்.தூங்கா நகரமான மதுரை இட்லிக் கடைகளுக்கு பெயர்போனது. நான் மதுரைக்காரன் என்பதில் எனக்கு எப்போதுமே ஒரு பெருமை உண்டு.அங்கு நான் படித்தபோது நிறைய கையேந்திபவன்களில் இட்லியை ரசித்து,ருசித்து சாப்பிட்டிருக்கிறேன். நீங்கள் சாப்பிடுவது இரண்டே இட்லியாய் இருந்தாலும் கூட அதற்கு நான்கு வகை சட்னி தருவார்கள். நினைத்துப் பார்த்தால் இப்பொழுதும் அந்த ருசி நாவில் தெரிகிறது. சென்னைக்கு வந்த பிறகு அப்படி ருசியான இட்லி எங்காவது கிடைக்காதா என்று ஏங்கியபோது ஆபத்பாந்தவனாய் அமைந்தது 'முருகன் இட்லிக்கடை'.என்ன ஒரு ருசி. இதுவரை இரண்டேமுறை தான் அங்கு சாப்பிட்டிருக்கிறேன்.அடுத்து, சரவணபவன் மினி இட்லி. நெய்மணக்க தருவார்கள்.விலை அதிகம் என்றாலும் கொடுத்தகாசுக்கு திருப்தியாக சாப்பிட்டுவிட்டு வரலாம். மயிலாப்பூரில் ஒரு வீட்டில் இருந்து தினமும் இட்லியை மலேசியா, சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்கிறார்களாம்.இப்படி பார்க்கும் இட...

இது ஒரு சோக்கு!!!

இது ஒரு சோக்கு.அதாவது நகைச்சுவை. மூன்று நண்பர்கள் ஒரு ஆயிரம் மாடி குடியிருப்பில் வசித்து வந்தார்கள்.அவர்களது வீடு 910வது தளத்தில் இருந்தது.லிப்ட் வசதி இருப்பதால் அவர்களுக்கு ஒன்றும் சிரமமாக இல்லை. ஒரு நாள் மூவரும் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தனர்.லிப்ட் பொத்தானை அழுத்திப் பார்த்தால் அது இயங்கவில்லை.அவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.வேறு வழியேயில்லை, நடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்.அது என்னவென்றால் இத்தனை மாடிகளையும் கடந்து செல்லும் களைப்பு தெரியாமல் இருக்க ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல வேண்டும் என்பதாகும்.முதலில் ஒருவன் ஆரம்பித்தான்.அது மிகவும் சுவாரசியமான கதையாய் இருந்தது.அவன் கதையை முடிக்கும் போது 400 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.அடுத்து இரண்டாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அது முதலாமவன் சொன்னதைவிட சுவாரசியமாக இருந்தது.கதையை முடிக்கும் போது 850 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.இப்பொழுது மூன்றாமவன் முறை.இருவரும் அவன் முகத்தை பார்த்தார்கள்.அவன் சொன்னான்." நீங்கள் இருவரும் நல்ல கதை சொன்னீர்கள்.முதலாமவன் திகில் கதையும்,இரண்...

வெகு நாட்களுக்கு பிறகு...

வணக்கம் தோழர்களே! நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவை இடுகிறேன். "சூடிக் கொடுத்த சுடர்கொடி" ஆண்டாளைப் பற்றி சிறிது பேசுவோம். ஆண்டாள் தமிழின் பெண்பாற் புலவர்களில் முக்கியமானவர்.மகாவிஷ்ணுவை கணவனாக அடைய வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் இருந்து அதை சாதித்துக் காட்டியவர். அவருடைய திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவை பக்தி ரசம் நிறைந்தவை. திருப்பாவையில் வரும் "ஓங்கி உளகளந்த" பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஓங்கி உளகளந்த உத்தமனாம் நாராயணனை வணங்கி பாவை நோன்பிருந்தால் விளையும் நன்மைகளை அப்பாடலில் அழகாக கூறியிருப்பார் ஆண்டாள்.தீங்கின்றி நாடெங்கும் மழை பெய்யும்,அதனால் நெற்பயிர்கள் ஓங்கி வளரும் , அப்படி வளர்ந்த கதிர்களுக்கு இடையே மீன்கள் துள்ளி விளையாடும், குவளைபோதை மலரில் வண்டானது தேன் குடித்த மயக்கத்தில் உறங்கும்,பசுக்கள் குடம்குடமாய் பால் சொரியும், எங்கும் நீங்காத செல்வம் நிறைந்திருக்கும் என்று அந்த பாடலில் ஆண்டாள் சொல்லியிருப்பார். என்ன ஒரு அழகான பாடல்.தினமும் இந்த பாடலை காலையில் பாடி அந்த பொழுதை தொடங்குங்கள்.அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள்.

'ஓ' போடுவோம்

கடைசிவரை கருணா நிதியுடன் இருப்பேன் என்று சொல்லி திடீரென்று ஜெ.உடன் கூட்டணி கண்ட வைகோவிற்கும், கூட்டணி ஆட்சி பற்றி பேசிவந்த இளங்கோவனை, டெல்லி மேலிடத்தில் சொல்லி கண்டிக்க வைத்து தனது வீட்டிற்கே வந்து மன்னிப்பு கேட்க வைத்து புளகாங்கிதம் அடைந்து,இன்று கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்முகாம் சென்று விடாமல் இருக்க இன்று சீட்டுகளை வாரி வழங்கி கூட்டணி ஆட்சிக்கும் தான் தயார் என்று காட்டியுள்ள கருணா நிதிக்கும்,பத்து சீட்டுகள் பத்தாது என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் தோழர்களுக்கும், நடக்கும் நகைச்சுவைக் காட்சிகளையெல்லாம் மெளனமாக வேடிக்கை பார்க்கும் வாக்காளப் பெருமக்களுக்கும் சத்தமாக ஒரு 'ஓ' போடுவோம்.

சாதி ஒழிப்பு வெண்பா

சாதிசாதி என்கிறீர் நாதியற்ற மூடர்காள் சாதியென்ப திரண்டுதான் சத்தியத்தை சொல்கிறேன் ஆதிதொட்டு உள்ளசாதி ஆணும்பெண்ணும் மட்டுமே மீதியெல்லாம் பாதிவந்த குப்பையென்று நீயும்காண் -தமிழ்சித்தன்

நாஸ்ட்ரடாமஸ் -2

ஆச்சரியமான ஒரு விசயம்,ஹிட்லரைப் பற்றி நாஸ்ட்ரடாமஸ் சொல்லியிருப்பதுதான். தனது கணிப்பில் அவர் ஹிஸ்டர் என்று கூறுகிறார்.அந்த ஒரு எழுத்துதன் வித்தியாசம்.ஹிட்லரை சில இடங்களில் குழந்தை என்றும், சில இடங்களில் ஜெர்மனியின் கேப்டன் என்றும் கூறுகிறார்.அவை நெப்போலியனையும், ஹிட்லரையும் கிறிஸ்துவிற்கு எதிரானவர்கள் எனக் குறிப்பிடுகிறார். மூன்றாவதாக ஒருவரைப் பற்றியும் அவர் கூறியிருக்கிறார். அவர் யார் என்பது இதுவரை அறியப்படவில்லை.

நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள்

நாஸ்ட்ரடாமஸ் எழுதிய வருங்காலத்தை பற்றிய ஆரூடங்கள் இன்றளவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. நாஸ்ட்ரடாமஸ் 1503ம் வருடம் பிரான்ஸில் பிறந்தார்.படிப்பில் சிறந்து விளங்கிய அவர் கல்லூரியில் மருத்துவம் பயின்று சிறந்த மருத்துவராக திகழ்ந்தார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த அவர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அதே பிளேக் நோயால் இழந்தார்.இதனால் மிகுந்த வருத்தம் அடைந்த அவர் இத்தாலி மற்றும் பிரான்ஸில் சுற்றித் திரிந்தார். இந்த சமயத்தில் தான் அவர் தன்னிடம் இருந்த வருங்காலத்தைப் பற்றி அறியும் திறமையை உணர்ந்தார். நாஸ்ட்ரடாமஸ் இத்தாலியில் இருந்தபோது ஒரு நாள் சாலையில் சில மதகுருமார்கள் அவரைத் தாண்டி சென்றார்கள். அப்போது அவர் திடீரென்று அவர்களில் ஒருவரின் காலில் விழுந்தௌ வணங்கினார். மற்றவர்கள் ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு அவர், "புனிதமான இந்த மனிதரை நான் வணங்குகிறேன்" என்றார். அவரால் வணங்க்கப்பட்ட அந்த மனிதர்தான் பிற்கால்த்தில் போப் ஐந்தாம் சிக்ஸ்டஸ் ஆனார். நாஸ்ட்ரடாமஸ் 1547ம் வருடம் மறுமணம் செய்துகொண்டு சலோன் நகரில் வசிக்கத் தொடங்கினார்.1555ம் வருடம...

பழமொழிகளும் அவற்றின் உண்மை அர்த்தங்களும்

பழமொழிகளும் அவற்றின் உண்மை அர்த்தங்களும்------------------------------------------- 1.பந்திக்கு முந்து,படைக்கு பிந்து உண்மை அர்த்தம்: நாம் உண்ணும் போது நமது கையானது உணவை எடுக்க முன்னால் செல்கிறது.(அதாவது பந்திக்கு முந்தும்).போரிடும்போது, எதிரியை வாளால் ஓங்கி வெட்ட முயலும் போது நமது கை பின்னால் செல்கிறது. இது போல் இன்னும் சில பழமொழிகளின் உண்மை அர்த்தத்தை பிறகு எழுதுகிறேன்.