நாட்டுநடப்பு
முன்பெல்லாம் காலம் ரொம்ப கெட்டுபோச்சு என்று யாராவது அங்கலாய்த்தால் எனக்கு எரிச்சல் வரும்.ஆனால் இன்று நானே அதை அடிக்கடி சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை படிக்கும் பொது நிறைய நேரங்களில் மனம் கனத்துப்போகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இன்று மிகவும் மலிந்துவிட்டன.பெண்களை தெய்வமாக கொண்டாடும் ஒரு தேசத்தில் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஒரு சோகமான நகைமுரண். டிவி,இணையம் போன்ற ஊடகங்கள் இன்று யாவர்க்கும் எளிதாக கிடைக்கின்றன.பருவ வயதினரை பாதை மாறச்செய்யும் எல்லா விஷயங்களும் இவற்றில் உண்டு.பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்த்து பார்த்து வளர்க்க வேண்டியிருக்கிறது.
சமீபத்தில்தான் கம்பர் எழுதிய இந்த செய்யுளை படித்தேன்.
பாகத்தில் ஒருவன் வைத்தான்
பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான்
அந்தணன் நாவில் வைத்தான்
இதன் விளக்கமாவது:
சிவபெருமான் தனது மனைவி பார்வதியை தனது உடம்பில் ஒரு பாகம் கொடுத்து வைத்தார்.தாமரையில் வசிக்கும் தேவி லட்சுமியை பெருமாள் தனது நெஞ்சிலே வைத்தார்.ப்ரம்மனோ தனது தேவி சரஸ்வதியை தன் நாவிலே வைத்தார்.
என்ன ஒரு அருமையான பாடல் பாருங்கள்.கடவுளர்களே தங்கள் மனைவிகளுக்கு உரிய இடம் தந்து போற்றும் நமது நாட்டில் இன்று தங்கள் உரிமையை நிலைநாட்ட அனுதினமும் பெண்கள் போராடவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
இந்த தேசத்தை எல்லா கடவுள்களும் சேர்ந்து ரட்சிக்க வேண்டுகிறேன்.
Comments