வெண்பா


       நான் முகநூலில் உறுப்பினர் கிடையாது.அது ஒரு நேரம்கொல்லி என்பது எனது அபிப்ராயம்.எனது தந்தையார் அதன் ஆக்ட்டிவ் உறுப்பினர்.ஏதாவது ஆன்மீக குழுக்கள் அல்லது கவிதை குழுக்களில் சேர்ந்து எதையாவது பதிவிட்டுக்குக் கொண்டிருப்பார்.ஒரு கவிதை குழுவில் அவ்வப்போது ஏதேனும்  தலைப்பு கொடுத்து அதற்கு ஏற்ற கவிதைகளை எழுதி பதிவிட சொல்வார்கள்.இவரும் உடனே எதையாவது யோசித்து எழுதி பதிவிடுவார்.
     சமீபத்தில் செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடியும் வெண்பா எழுத சொன்னார்களாம்.இதை கேட்டவுடன் எனது மூளைக்குள் ஒரு நமைச்சல்.நானும் ஒரு காலத்தில் கவிதை எழுதியவன் என்பதால் இயல்பாகவே இதை ஒரு சவாலாக ஏற்று நாம் ஏன் முயற்சி செய்ய கூடாது என்று தோன்றியது. அதன் பக்க விளைவே இந்த வெண்பா.படித்துவிட்டு இது பக்க விளைவா இல்லை பக்கா விளைவா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

செருப்பு தேய நடந்து தேடி நல்ல
பருப்பு வாங்கி வந்தால் - மனைவி
இருப்பதில் மட்டம் இதுதான் என்கிறாள்
கேட்டேன் அதை விளக்குமாறு.

Comments

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)