இமயத்து ஆசான்கள்
இந்த புத்தகத்தை சென்னையின் பிரபல ஆன்மீக பொருட்கள் விற்பனை நிலையத்தில் வாங்கி படித்தேன்.சுவாமி ராமா என்பவரின் வாழ்க்கை சரிதம்(சுய சரிதம்).
இமயமலையில் பிறந்து வாழ்ந்த இந்த ஸ்வாமியின் வரலாறு மிக சுவாரசியமாக இருந்தது.மிக சிறந்த குருநாதர் வாய்க்கப்பெற்ற இவர் உண்மையில் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட ஆத்மா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.தனது ஆன்மீக வாழ்க்கையில் தனக்கு உதவிய, வழிகாட்டிய அனைத்து குருமார்களை பற்றியும் நன்றியுடன் நினைவு கூர்ந்து எழுதியுள்ளார்.மனிதர்கள் எளிதில் அடைய முடியாத இமயத்தின் ரகசியமான பல இடங்களில் சுற்றி திரிந்து ஆன்மீக அனுபூதி அடைந்துள்ளார்.
இறை தாகம் கொண்டவர்கள் அவசியம் படித்து பாருங்கள்,பயனடைவீர்கள்.
Comments
If you are in CHennai you can get it in Giri Traders.
Thanks,
Siddha