Posts

Showing posts from 2007

கிணற்றில் போட்ட காசு

ஒருமுறை எங்கள் உறவினர்களுடன் பக்தி சுற்றுலா சென்றிருந்தோம்.அப்போது ஒரு கோவிலில் இருந்த கிணற்றில் சிலர் காசு போட்டுக் கொண்டிருந்தனர். நாங்கள் என்ன என்று கேட்டதற்கு மனதில் ஏதாவது விருப்பத்தை நினைத்து கொண்டு அதில் காசு போடவேண்டும் என்றும் , அப்படி போட்ட காசு நீரில் மூழ்காமல் கிணற்று திட்டில் நின்றுவிட்டால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்றும் சொன்னார்கள்.ஆசை யாரைவிட்டது.எனவே நாங்களும் ஒவ்வொருவராக முயற்சி செய்தோம்.ஒன்றும் பலனில்லை.கடைசியாக எனது மதினி காசு போட்டார். அந்த காசு சரியாக திட்டில் நின்றுவிட்டது. எங்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. அப்பாடா ஒருவரது ஆசையாவது நிறைவேறப்போகிறது என்று.உடனே அனைவரும் "நீ மனதில் என்ன நினைத்து காசு போட்டாய்" என்று அவரை கேட்டார்கள். அவர் ரொம்ப நிதானமாக சொன்னார்."கடவுளே எப்படியாவது இந்த காசை திட்டில் நிற்கசெய்" என்று வேண்டிக்கொண்டேன்.

ஹிஹிஹி

டீச்சர்: டேய் ராமு, நாய்க்குட்டி பத்தி நீ எழுதிருக்க கட்டுரை அப்படியே உன் அண்ணன் கட்டுரை மாதிரி இருக்கு ராமு: டீச்சர்,ரெண்டு பேரு எழுதிருக்கறதும் எங்க வீட்டு நாய்க்குட்டிய பத்திதான். டீச்சர்: குமார், இந்த உலக வரைபடத்தில் நம்ம நாடு எங்க இருக்குன்னு காட்டு. ராமு:டீச்சர், என் உயிரே போனாலும் தாய் நாட்ட காட்டிகுடுக்க மாட்டேன்.

சோக்கு

பள்ளியில் டீச்சர் ஒருநாள் மாணவர்களை ராசி மண்டலத்தில் உள்ள ராசிகளை சொல்லுமாறு கேட்டார். முதலில் ராமை சொல்ல சொன்னார்.அவன் சொன்னான்,"Taurus the Bull". இரண்டாவதாக குமாரை கேட்டார்.அவன் சொன்னான்,"Cancer the crab".அடுத்து ராஜாவை கேட்டார்.அவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு சொன்னான்,"Mickey the mouse".

விறகுவெட்டியும்,தேவதையும் - புதுக்கதை

நம் எல்லோருக்கும் விறகுவெட்டி கதை தெரியும்.காட்டுக்கு மரம் வெட்டச் செல்லும் விறகுவெட்டி ஆற்றில் தன் கோடரியை தவறவிட்டுவிடுவான்.பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் அழுவான்.உடனே ஒரு தேவதை தோன்றி "எதற்காக அழுகிறாய்?" என்று கேட்கும்.இவன் நடந்ததை சொல்வான்.அந்த தேவதை முதலில் ஒரு தங்கக் கோடரி தரும்.விறகுவெட்டி அது தனது கோடரி இல்லை என்பான்.பிறகு தேவதை வெள்ளி கோடரி தரும்.இவன் அதுவும் தன்னது இல்லையென்பான்.கடைசியில் இரும்பு கோடரி தரும்.உடனே அதுதான் தன்னுடைய கோடரி என்பான்.அவனுடைய நேர்மையை மெச்சி மூன்று கோடரிகளையும் அவனுக்கு தேவதை தந்துவிடும். புதிய கதை என்ன தெரியுமா? விறகுவெட்டி வழக்கம் போல் காட்டுக்கு சென்றான்.இந்த முறை அவனுடைய மனைவியையும் அழைத்து சென்றான்.அவன் மும்முரமாய் விறகு வெட்டிக் கொண்டு இருந்த போது அவன் மனைவி ஆற்றில் விழுந்துவிட்டாள்.அவன் உடனே ஓவென்று அழ ஆரம்பித்தான்.வழக்கம்போல் தேவதை வந்தது."இந்த தடவ எத தண்ணிக்குள்ள போட்ட, எடுபட்டபயலே?" என்று கேட்டது.விறகுவெட்டி "என் மனைவி ஆற்றில் விழுந்துவிட்டாள்" என்றான்.தேவதை ஆற்றில் இருந்து ரம்பையை வரவழைத்து "இவளா உன்...

மைனாவும், நைனாவும்

சிறுவன் ராமு ஒரு நாள் ஒரு மைனாவை வாங்கி வந்தான்.அதை மிகவும் பாசமாக வளர்த்து வந்தான்.மதியம் உணவு இடைவேளையின்போது வீட்டிற்கு ஓடி வந்து மைனாவை பார்த்துவிட்டு செல்வான்.ஒரு நாள் அவன் பள்ளிக்கு சென்றபிறகு அவன் தாய் மைனா கூண்டை சுத்தம் செய்ய திறந்தாள்.அப்பொழுது அது வெளியே வந்து கீழே விழுந்துவிட்டது.இதில் அதன் ஒருகால் உடைந்துவிட்டது.இதைப் பார்த்த அவள் மிகவும் கவலை கொண்டாள்.ராமுவிற்கு என்ன சமாதானம் செய்வது என்று யோசித்தாள்.அதற்குள் மதியம் வந்துவிட்ட ராமு, "அம்மா!பசிக்கிது சாப்பாடு போடுமா" என்றான்.அவன் தாய் மெதுவாக,"ராமு, மைனவுக்கு கால் உடைஞ்சிருச்சு" என்றாள்.உடனே ராமு,"அம்மா! நானே பயங்கர பசில வந்துருக்கேன், சீக்கிரம் சோறு போடுமா" என்றான்.அவன் தாய்க்கு ஒரே ஆச்சரியம், அதே சமயம் நிம்மதி.பிறகு ராமு பள்ளிக்கு திரும்பிவிட்டான்.மீண்டும் மாலை வீட்டிற்கு வந்தவன் மைனாவை பார்த்தான்.அதன் கால் உடைந்திருப்பதை பார்த்த அவன் ஓவென்று அழ ஆரம்பித்தான்.அவன் தாய் ஓடி வந்து "ஏன்டா அழற" என்றால்.ராமு, " அம்மா மைனாவிற்கு கால் உடைந்து இருக்கு. நீ ஏன் என்கிட்ட சொல்லல?" என்...

லிட்டில் மேரி சோக்கு

லிட்டில் மேரி ஜோக்குகள் அமெரிக்காவில் பிரபலம்(லிட்டில் ஜானி ஜோக்கும் தான்.ஆனால் பெரும்பாலான லிட்டில் ஜானி ஜோக்குகள் 'ஏ' ரகத்தை சார்ந்தவை).லிட்டில் மேரியை ஒரு அப்பாவி சிறுமியாக சித்தரித்திருப்பார்கள்.அதில் ஒரு சோக்கு இங்கே: லிட்டில் மேரி தனது தோட்டத்தில் அழுதுகொண்டு எதையோ குழியில் தள்ளி புதைத்து கொண்டு இருந்தாள்.அவளது அண்டை வீட்டுக்காரர் இதைபார்த்து,"லிட்டில் மேரி! எதற்காக அழுது கொண்டு இருக்கிறாய்?" என்று கேட்டார். லிட்டில் மேரி சொன்னாள்,"எனது செல்ல மீன் இறந்துவிட்டது. அதை புதைத்துக் கொண்டு இருக்கிறேன்".பக்கத்து வீட்டுக்காரர் உடனே," அடடா! அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் ஒரு மீனிற்கு இந்த குழி மிகவும் பெரியது" என்றார்.அதற்கு லிட்டில் மேரி சொன்னாள்," மீன் என்னவோ சின்னதுதான்.ஆனால் அது இருப்பது உங்கள் பூனையின் வயிற்றுக்குள்ளே".

மாணவர் ஜோக்ஸ்

பையன்: அப்பா! ஸ்கூல்ல இந்த குமார் தொல்ல தாங்க முடியலப்பா.எப்ப பாரு என்ன அடிச்சுகிட்டே இருக்கான். அப்பா: நீ இத உங்க வாத்தியார்கிட்ட சொல்ல வேண்டியதுதானடா. பையன்: அட போப்பா! எங்க வாத்தியார் பேரு தான் குமார். ----------------------------------------------------------------------------- ஆசிரியர்: டேய் ராஜா! உலகத்த முதல்ல கப்பல்ல சுத்திவந்தது யாரு சொல்லு. ராஜா: சார்! வெட்டித்தனமா ஊர் சுத்தரவனுங்கள பத்தி நாம ஏன் சார் பேசனும். ----------------------------------------------------------------------------- ஆசிரியர்: மாணவர்களே! மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் 90கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.திருச்சியில் இருந்து மதுரை நோக்கி ஒரு ரயில் 110கிமீ வந்து கொண்டு இருக்கிறது.இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும்போது என் வயதென்ன? மாணவன்: சார்! 54 சார். ஆசிரியர்: சபாஷ்! எப்படிடா கரெக்டா சொன்ன? மாணவன்: எங்க மாமா ஒருத்தர் இருக்கார் சார்.அவர் ஒரு அரைலூசு.அவருக்கு வயசு 27.

முதலாளி,தொழிலாளி

ஒரு கம்பெனி முதலாளியும் இரண்டு தொழிலாளிகளும் நடந்து சென்று கொண்டு இருந்தார்கள்.அப்பொழுது ஒரு பூதம் அவர்கள் முன் தோன்றி உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டது.தொழிலாளி1 சொன்னான்: " நான் இப்பொழுதே அமெரிக்கா செல்ல வேண்டும்.அங்கே லட்சலட்சமாக சம்பாதிக்க வேண்டும்" .பூதம் "அப்படியே ஆகட்டும்" என்றது.அவன் உடனே மறைந்துவிட்டான்.தொழிலாளி2 சொன்னான்," நான் இப்பொழுதே ஹவாய் தீவு செல்ல வேண்டும்.அங்கே நீச்சல் உடை அழகிகளோடு ஆட வேண்டும்".பூதம் "அப்படியே ஆகட்டும்" என்றது.அவனும் உடனே மறைந்துவிட்டான்.இப்பொழுது முதலாளியின் முறை.பூதம் "உங்களுக்கு என்ன வேண்டும்" என்று கேட்டது.அவர் சொன்னார்."அவர்கள் இருவரும் உடனே இங்கே திரும்பி வர வேண்டும்". நீதி: எப்பொழுதும் முதலாளி தொழிலாளியைவிட புத்திசாலி.

நீண்ட இடைவெளிக்கு பிறகு

வணக்கம் நண்பர்களே! வெகு நாட்களுக்கு பிறகு இந்த பதிவை இடுகிறேன்.இந்த முறை ஒரு கவிதை. வாசலில் கையில் குழந்தையோடு நின்றிருந்தாய்! "என்னைப் பார்த்ததும் குழந்தைக்கு முத்தமிடு" என்றாய் குனிந்து முத்தமிட்டேன் குழந்தைக்கல்ல உனக்கு கடுமையாக கோபித்தாய் என்னை நீ உனக்கேன் புரியவில்லை எந்தக் குழந்தைக்கு என்று சொல்லாதது உன் குற்றமென்று!