பா.கு மனதில் மின்னல் போல ஒரு எண்ணம் பளிச்சிட்டது."பேசாம வீட்டை விட்டு ஓடி போயிருவோம் " என்று நினைத்தான்.உடனே தனது கால்சட்டை பையில் எவ்வளவு சில்லறை தேறும் என்று பார்த்தான். அலிபாபா குகை போன்ற அவனது பாக்கெட்டில் வறுத்த கடலை, இலந்தை வடை,சோடா மூடி ஆகிய வஸ்துக்களும் அவற்றின் நடுவே சில்லறையாக 20 ரூபாயும் தேறியது.உடனே, பதுங்கி பதுங்கி ஊர் சாவடி வந்தான்.அவன் வரவும் டவுன் பஸ் வரவும் சரியாக இருந்தது.அதில் தொற்றி கொண்டான்.பக்கத்தில் உள்ள பெரிய ஊரான மூக்கறுத்தான்பாளையத்தை அடைவது அய்யாவின் எண்ணம். அந்த ஊரை அடைந்ததும் டீ கடையில் அஞ்சு சமோசா, ஒரு டீ அமுக்கினான்(அதற்குமேல் வயிற்றில் இடம் இருந்தது, பைசா தான் இல்லை).பிறகு என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தபோது அந்த அதிசயம் நடந்தது.அவன் அருகில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த சாமியார் போன்ற ஒரு பெரியவர் மயங்கி விழுந்தார்.பா.கு அவரை முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்ப, முழித்தவர் "சுகர் சுகர்" என்றார். பா.கு உடனே டீக்கடையில் இருந்த சர்க்கரையை அள்ளி அவர் வாயில் போட்டான்.சிறிது நேரத்தில் அந்த மனிதர...