அதாகப்பட்டது மஹாஜனங்களே ! இந்த கொரோனா அட்டகாசத்தின் நடுவே நாம் ஒரு அட்டகாசமான(?) கதையை பார்ப்போம். நம்ம கதையின் நாயகன் சிவராமக்ரிஷ்ணகணபதிசுப்ரமணியன்.சுருக்கமாக சிராகிகசு.நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு சிவா.ஐடி நிறுவனத்தில் பணி . கொரோனா ஆட்டம் தொடங்கியதும் அவனது மேலாளர் மன்னார்குடி மாத்ருபூதம் அழைத்தார் .அவர்களுக்கு இடையே நடந்த சம்பாஷணை இதோ. மேலாளர் ம.மா: மிஸ்டர் சிவா! நான் உன்னை எதற்கு அழைத்தேன் என்றால் ... சிவா : சார் , அந்த பொண்ணு லல்லி சொல்வது எல்லாம் பொய் .நான் அவகிட்ட ப்ரொபோஸ் எல்லாம் செய்யல. வாங்க லல்லி, கேன்டீன்ல காபி குடிக்க போலாம்னு தான் சொன்னேன் மேலாளர் ம.மா: இந்த கருமம் வேறயா? நான் உன்னை அதுக்கு கூப்பிடல. கொரோனா பரவரதால எல்லாரையும் work from home செய்ய சொல்றாங்க.நீ நாளைலருந்து ஆபீஸ் வராதே .வீட்ல இருந்து வேல பாரு சிவா: சார் என்னால வீட்ல இருந்து வேல செய்ய முடியாது, ரொம்ப கஷ்டம் மேலாளர் ம.மா: ஆமா, நீ ஆபீஸ் வந்தா மட்டும் வேல செஞ்சு கிழிச்சிடுவ . சொன்னத செய்.அதுமட்டுமில்ல சிவா, அந்த லல்லி உனக்கு அக்கா மாதிரி, என்னை உன் மாமாவா நெனச்சுக்கோ, புரியுதா