Posts

Showing posts from 2008

சென்னையில் ஒரு மழைக்காலம்

இந்த வருட மழை சீசன் ரொம்பவே படுத்திவிட்டது. இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் சென்னை-வேளச்சேரியில் தான் வசித்து வருகிறேன். ஆனால் இந்த வருடம்தான் கன மழை. நிஷா செய்த அட்டகாசம் கொஞ்ச, நஞ்சம் இல்லை. நான் நவம்பர் இருபத்தேழாம் தேதி அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது எங்கள் வீட்டை சுற்றி முழங்கால் அளவு தண்ணீர் இருந்தது. நான் தூங்கி எழுந்து மறுநாள் பார்த்தால் இடுப்பளவு தண்ணீர். பாரதி பாட்டை மாற்றி " எங்கெங்கு காணினும் தண்ணியடா" என்று பாடினேன். பிறகு மீண்டும் தூங்கிவிட்டேன்.திடீரென்று வெளியில் "போட்! போட்!" என்று யாரோ கத்தும் சத்தம் கேட்டது.நான் உடனே, "பாரடா இந்த அநியாயத்தை! இந்த மழையில் எவனோ குழந்தைகள் விளையாட போட் பொம்மை விற்றுக் கொண்டிருக்கிறான்" என்று நினைத்து , யார் அந்த மனிதன் என்று எட்டிப் பார்த்தால் பெரிய கட்டுமரம் ஒன்று எங்கள் வீதியில் மிதந்து செல்கிறது. எங்கள் வீட்டு ஓனரைக் கூப்பிட்டு "இது என்ன சார்?" என்றேன். அவர் ரொம்ப நிதானமாக "நாம இப்ப வெளில போக முடியாது சார். ஏன்னா , இந்த தண்ணியில பா...

மை டியர் குட்டிச்சாத்தான்

குட்டிச்சாத்தான். குறும்பு செய்யும் குழந்தைகளை இப்படி "அன்புடன்" அழைப்பது நமது வழக்கம்.நான் அடிக்கடி இத்த வார்த்தையை உபயோகிப்பேன்.எனது அக்கா மகனை இப்படித்தான் கூப்பிடுவேன்.அவன் சரியான அறுந்த வால்.ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டான்.அதே சமயம் பெரிய ஆட்களையும் அப்படி அழைப்பேன். எங்கள் அலுவலகத்தில் எனக்கு அடுத்த இருக்கையில் அமரும் நபரை இப்படி சொல்லி திட்டுவேன்.அவனும் இப்படித்தான். எப்போது பார்த்தாலும் எதாவது விஷமம் பண்ணிக் கொண்டு இருப்பான். குறும்பு செய்பவர்களை ஏன் குட்டிச்சாத்தான் என்று அழைக்கிறோம்?யார் இந்த குட்டிச்சாத்தான்? இப்படி எல்லாம் உட்கார்ந்து யோசித்ததன் விளைவே இந்த பதிவு. குட்டிச்சாத்தான் பற்றி நிறைய கதைகள். மை டியர் குட்டிச்சாத்தான் படம் நிறைய பேர் பார்த்திருப்பார்கள்.அதில் குட்டிச்சாத்தான் குழந்தைகளின் நண்பன் எனக் காண்பித்திருப்பார்கள்.கேரளா மாந்திரீகத்தில் குட்டிச்சாத்தான் ஒரு அங்கம்.எனது நண்பர் ஒருவரிடம் கேட்டபோது அவர் , சாத்தன் என்றால் சிவன் என்றும், குட்டிச்சாத்தான் சிவனின் ஒரு அம்சம் என்றும் சொன்னார். குட்ட...

ஆங்கில நாவல்கள்

எனக்குத் தெரிந்த மொழிகள் மூன்று தான். தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு. இதில் தமிழ் தாய்மொழி என்பதால் சரளமாக பேச, எழுத வரும். ஆங்கிலம் அலுவலகத்தில் அதிகம் பயன்படுத்துவதால் அதுவும் ஓரளவு சரளமாக பேசவும், எழுதவும் வரும். பிரெஞ்சு எனது மொழி ஆர்வத்தால் நான் கற்றுக் கொண்டது.அதிகம் உபயோகிக்காததால் வெகு சுமாராக பேசவும், எழுதவும் வரும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் தமிழ் தவிர மற்ற மொழி புத்தகங்களை அதிகம் படிக்க மாட்டேன். அதுவும் ஆங்கில நாவல்கள் எனக்கு மிகவும் அலர்ஜி. ஆனால் நான் அலுவலக விசயமாக வெளிநாட்டிற்கு சென்று சிறிது காலம் தங்க வேண்டியிருந்தது. நானோ புத்தக புழு. அங்கோ தமிழ் புத்தகங்கள் கிடைப்பது வெகு சிரமம். என்ன செய்வது? சரி, இந்த ஆங்கில நாவல்களை முயற்சி செய்து தான் பார்ப்போமே என்று அருகிலிருந்த பெரிய புத்தகக் கடைக்கு சென்று புத்தகங்களை பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தேன்.நான் தமிழிலேயே விரும்பிப் படிப்பது மர்ம நாவல்கள் தான்.எனவே அது போலவே ஆங்கிலத்திலும் தேடினேன்.ஆங்கில நாவல்களில் உள்ள சவ்கர்யம் பின் அட்டையில் கதை சுருக்கம் போட்டிருப்பார்கள்.அது மட்டுமல்லாமல் முன் அட்டையில் "பெஸ்ட்...

பலகாரம், ஜாக்கிரதை!!!

தீபாவளியை அவ்வளவு விமரிசையாய் கொண்டாட மாட்டோம் என்று சென்ற பதிவில் பகுமானமாய் சொல்லிவிட்டேன். ஆனாலும் இந்த தீபாவளி பலகாரம் சாப்பிடாமல் இருக்க முடியுமா? ஹிஹி. வளரும் பிள்ளை என்பதால் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டேன்.அது என்னடாவென்றால் வயிற்றை கடமுட என்று என்னவோ பண்ணுகிறது. எனது அக்கா வேறு "முன்யோசனை இல்லாமல் சாப்பிட்டால் இப்படித்தான் 'பின்விளைவுகள்' இருக்கும்" என்று சொல்லி ஓட்டிக் கொண்டிருக்கிறாள். எனக்கு இந்த இங்கிலீஷ் மருந்துகள் அவ்வளவாய் கேட்காது.அதனால் வீட்டில் இருந்த ஓமத்திரவத்தை தண்ணிரில் கலந்து குடித்தேன். அதன்பிறகு வயிறு பரவாயில்லாமல் இருக்கிறது. அப்படியும் எங்கள் வீட்டில் என்னை விட்டார்களா என்றால் அதுதான் இல்லை. இன்று ஊருக்கு கிளம்புகிறேன் என்று வீட்டில் உள்ள பலகாரங்களை எல்லாம் மூட்டைகட்டி தயாராக வைத்துள்ளார்கள்.எதற்கு என்று கேட்டால் "இங்கு இதை எல்லாம் சாப்பிட ஆள் இல்லை. நீ கொண்டு போய் உனது நண்பர்களுக்கு கொடு" என்று பதில் வேறு. ஹ்ம்ம்.விதி யாரைவிட்டது.இந்த பதிவை எனது நண்பர்கள் படிக்கும்முன் இந்த பலகாரங்களை அவர்கள் தலையில் கட்டிவிட வேண்டும்.அதற்க...

தீபாவளி சமயத்தில் பொங்கல் பதிவு

தீபாவளி திருநாளை நல்லவிதமாக கொண்டாடியாகிவிட்டது. இனி அடுத்து பெரிய பண்டிகை என்றால் அது பொங்கல் தான். மதுரைப் பக்கம் நாங்கள் தீபாவளியை பெரிதாக கொண்டாட மாட்டோம்.சேட்டுகள் இதற்கு விதிவிலக்கு.அவர்கள் தீபாவளியை லக்ஷ்மி பூஜை என்று கொண்டாடுவார்கள்.எங்களுக்கு பெரிய பண்டிகை பொங்கல் தான். பண்டிகை என்றால் குறைந்தது மூன்று நாட்களாவது கொண்டாட வேண்டும்.அப்படிப்பார்த்தால் பொங்கல் ஒரு சிறந்த பண்டிகை.நான்கு நாட்கள் நிதானமாக கொண்டாடலாம்.அதைவிட முக்கியம் தீபாவளியை ஒப்பிடும்போது பொங்கலுக்கு செலவு குறைவு.அதனால் ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி அனைவரும் நிறைவாய் கொண்டாடலாம் .புதுப்பானை, பச்சரிசி,வெல்லம்,கரும்பு இவை போதும் பொங்கலுக்கு.சென்ற பொங்கலுக்கு என்னால் கரும்பு சாப்பிட முடியவில்லை.மேல்தாடை பல்லில் இருந்த தொந்தரவு காரணமாக கரும்பு சாப்பிடுவதை தவிர்த்தேன். இந்தமுறை அதற்கும் சேர்த்துவைத்து சாப்பிட வேண்டும்.நெய் சொட்ட சொட்ட வீட்டில் சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். அதன் மணமே நம்மை சாப்பிட சொல்லும். கோவிலில் தருகின்ற பொங்கல் ஒரு தனிச்சுவை கொண்டிருக்கும். சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்த...

சில கவிதைகள்!!!

தோட்டத்தில் உள்ள எந்த பூவிலும் வீசவில்லை உன் வாசம்!!! மணலில் வீடுகட்டி விளையாடும் குழந்தை விசித்திரமாய் பார்க்கிறது உன் பாதச்சுவட்டை காவல்காக்கும் என்னை!!! குழந்தைகள் உள்ள வீட்டைப்போல் இருக்கிறது உன் நினைவுகளால் கலைந்துகிடக்கும் என் மனம்!!!

சிரிப்போ சிரிப்பு!!!

வெயில் படும் பொருட்கள் எல்லாம் அழகாக இருப்பதாக கவிஞர் ஷெல்லி சொன்னான்.அதுபோல சிரிக்கும் போது எல்லா மனிதர்களும் அழகாக இருப்பதாக எனக்கு தோன்றும்.நான் தினமும் சந்திக்கின்ற,பழகுகின்ற மனிதர்களிடம் நான் கூர்ந்து கவனிப்பது அவர்களின் சிரிப்புதான்.சிரிப்பில்தான் எத்தனை வகை.நல்ல சிரிப்பு,கள்ள சிரிப்பு,ஆணவ சிரிப்பு,மயக்கும் சிரிப்பு ....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.என் அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர்களில் இருவரின் சிரிப்பு ரசிக்கும்படி இருக்கும்.ஒருவன் ஆந்திராக்காரன்(பிரதீப் என்பது அவனது திருநாமம்).அவனுக்கு வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவை.எதற்கெடுத்தாலும் சிரிப்பான்.அந்த சிரிப்பும் இதயத்தில் இருந்து வரும்.இன்னொருவர் எனது அருமை நண்பர் செந்தில். ஒருவிதமான குறும்புத்தனம் நிறைந்த ஒரு சிரிப்பு சிரிப்பார்.அதுவும் சத்தமாக சிரிப்பார்.பார்க்க மிக அழகாக இருக்கும். அடுத்த நான் ரசித்த சிரிப்பு என் மாப்பிள்ளை சுந்தருடைய சிரிப்பு.பேசும்போது ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஒரு சிரிப்பு சிரிப்பான்.கேட்க சந்தோசமாக இருக்கும். என்னுடைய சிரிப்பின் மேல் எனக்கு பெரிய அபிப்பிராயம் கிடையாது.ஏதோ சிரிப்பேன் , அவ்வளவுதான்.ஆனால்...

ஒரு கவிதை!!!

பிரபஞ்சமே உறங்கும் வேளையிலும் விழித்திருப்பது நாம் மூன்று பேர்தான் நீ, நான், நம் காதல்!!!

அன்பும்,கருணையும்

இந்த காலத்தில் அன்பும்,கருணையும் நிறைந்த முகங்களை பொது இடங்களில் பார்ப்பது மிக அபூர்வம்.சமீபத்தில் நிலம் பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகம் சென்றிருந்தேன்.அங்கு கூட்டமாக இருந்ததால் நாங்கள் வெளியில் இருந்த பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கருகில் மூன்று பெண்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.அதில் இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக தெரிந்தார்கள்.மூன்றாவது பெண்மணி மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர் என்பது அவர் உடையிலேயே தெரிந்தது.மற்ற இரு பெண்களில் ஒருவர் அந்த மேல்தட்டு பெண்ணிடம் பேருந்தில் வரும்போது நேர்ந்த சிரமத்தை சொல்லிக் கொண்டிருந்தார். படிக்கட்டு மிகவும் உயரமாக இருப்பதாகவும், தன்னால் ஏறி இறங்க முடியவில்லை, மிகவும் கடினமாக இருந்தது என்றும் சொன்னார்.அந்த மேல்தட்டு பெண்மணி(அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கும்) அந்த பெண் சொல்வதை அவ்வளவு அக்கறையாய் கேட்டார்.அவர் முகத்தில் அவ்வளவு கருணை இருந்தது."அடி ஏதாவது பட்டுவிட்டதா?, கால் மிகவும் வலிக்கிறதா?" என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.பிறகு நாங்கள் அலுவலகத்தின் உள்ளே சென்றுவிட்டோம். திரும்பி வருகையில் அந்த கருண...

முட்டாள்களின் தோட்டத்தின் எலுமிச்சை மரம்

அண்மையில் ஒரு விடுமுறை நாளில் அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது.என்னுடன் பணியாற்றும் நண்பரும் வந்திருந்தார். அன்று செய்ய வேண்டிய வேலைக்கான முன்பணிகளை ஏற்கனவே செய்து வைத்திருந்தோம் .அதனால் சென்ற உடன் வேலையை தொடங்கினோம்.காலையில் ஆறரை மணிக்கு நாங்கள் எங்கள் பணியை தொடங்கினோம். நண்பர் புத்திசாலி(என்னைப் போல் இல்லை).அதிகாலை நேரத்திலே செல்வதால் நிச்சயம் சீக்கிரம் பசியெடுக்கும் என்று தெரிந்து வீட்டில் இருந்து பிரெட் சான்ட்விச் செய்து எடுத்து வந்திருந்தார்.அதை நாங்கள் சாப்பிடும் போது "இந்த பாடலை கேளுங்கள், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்று தனது செல்போனில் ஒரு பாடலை ஒலிக்க செய்தார்.அவர் சொன்னதுபோல அந்த பாடலை நான் ஒருமுறை கேட்டபோதே என்னை ஈர்த்தது.அது ஒரு ஆங்கிலப் பாடல் .ஆங்கில ஆல்பம் ஒன்றில் உள்ள பாடல்.அந்த பாடலை பற்றி மேலும் கேட்டபோது எனது நண்பர் அந்த பாடல் உள்ள தொகுப்பின் பெயர் பூல்ஸ் கார்டன்(Fools Garden) என்றும் அந்த பாடலின் பெயர் லெமன் ட்ரீ(Lemon Tree) என்றும் சொன்னார். பாடல் எனக்கு பிடித்ததற்கு காரணம் பாடலின் கவித்துமான வரிகளும் அதற்கு ஏற்ற மெல்லிய இசையும்.ப...

அமிர்த வெண்ணெய்

எனது பெரியப்பா வீட்டிற்கு சென்றபோது நிகழ்ந்த ஒரு சம்பவம்.இன்றுவரை எனது பெரியப்பா அதை சொல்லி சிரிப்பார்.ஒருமுறை அவர் வீட்டிற்கு சென்றிருந்தபோது சுச்சா போவதற்காக கழிவறைக்கு சென்றேன். அங்கு சுவர் திட்டில் ஒரு டப்பா இருந்தது.அதில் "அமிர்த வெண்ணெய்" என்று பெயர் வேறு எழுதியிருந்தது.எனக்கு ஒன்றும் புரியவில்லை. வெண்ணெய் தெரியும், இது என்னடா அமிர்த வெண்ணெய் என்று ஒரு குழப்பம்.அடுத்த சந்தேகம் வெண்ணெய்யை எதற்காக கழிவறையில் வைத்திருக்கிறார்கள் என்பது.உடனே அந்த டப்பாவை கையில் எடுத்துக்கொண்டு என் பெரியப்பாவிடம் சென்றேன்."என்ன பெரியப்பா! இதில் அமிர்த வெண்ணெய் என்று எழுதியிருக்கிறது.ஆனால் இதைப் போய் யாரோ கக்கூசில் வைத்திருக்கிறார்கள். நான் கொண்டு போய் சமையலறையில் வைத்துவிடட்டுமா?" என்றேன். அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.விழுந்து,விழுந்து சிரித்தார்.பிறகு, "அடேய்! இது சாப்பிடும் வெண்ணெய் இல்லை. இது ஆயுர்வேத மருந்து.எனக்கு மூலநோய் இருப்பதால் அதற்கு வெளியே தடவும் மருந்து.நல்லவேளை என்னைக் கேட்டாய்." என்று சொல்லி சிரித்தார்.அதில் இருந்து என்னை பார்க்கும் போதெல்லாம் அதை சொ...

பறவைக் காய்ச்சலும், கேக்கும்

பறவைக் காய்ச்சல் மே.வங்கத்தில் வந்து ஒரு கலக்கு கலக்கிய போது இங்கே தமிழ்நாட்டிலும் கோழி விற்பனை சரிந்தது. என் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் தொந்தியும், தொப்பையுமாய் இருப்பார். திடீரென்று அவர் தொந்தி குறைந்து காணப்பட்டது. "என்ன ஆயிற்று, உடற்பயிற்சி ஏதாவது செய்கிறீர்களா? " என்று கேட்டேன். அவர் உடனே "அடப் போங்க! பறவை காய்ச்சல் பயத்தால் வீட்டில் சிக்கன் சமைக்க மாட்டேங்கறாங்க. எனக்கும் வெளிய சாப்பிட பயமாயிருக்கு" என்றார்."பரவாயில்லை, இப்படியாவது தொந்தி குறைந்ததே" என்று சொன்னேன். நண்பர் மிகவும் வேடிக்கையான மனிதர். "வாரத்திற்கு ஏழு நாட்கள் மட்டும்தான் அசைவம் சாப்பிடுவேன்.மீதி நாட்கள் சாப்பிட மாட்டேன்" என்பார். அப்படிப்பட்ட மனிதர் அசைவம் சாப்பிடாமல் இருந்தது ஒரு சாதனை தான். மக்கள் முட்டை சாப்பிடுவதை கூட தவிர்த்தனர். நான் ஒரு எஜிடேரியன்(சைவம், ஆனால் முட்டை மட்டும் சாப்பிடுவேன்). நானும் முட்டை சாப்பிடாமல் இருந்தேன். இடையில் ஒருநாள் எனது மச்சான் வீட்டிற்கு சென்றபோது கேக் வாங்கிப் போயிருந்தேன். அன்று எனது அக்காள் மகனும் அங்கு வந்திருந்தான். வாங்கிப் போயிரு...

போதகரும்,காரோட்டியும்

போதகர் ஒருவர் இறந்து சொர்க்கம் சென்றார்.அங்கே சொர்க்கத்திற்குள் நுழையும் வாயிலின் அருகே நீண்ட வரிசை இருந்தது.அவரும் அந்த வரிசையில் நின்றார்.அந்த வரிசையில் அவருக்கு முன்னர் ஜீன்ஸ் பேண்டும்,குளிர் கண்ணாடியும் அணிந்த ஒரு இளைஞன் நின்றிருந்தான்.சொர்க்கத்தின் காவலாளி அந்த இளைஞனிடம், " நீ யார் என்பதை என்னிடம் சொல்.அதைவைத்துதான் உன்னை உள்ளே அனுப்புவதா,இல்லையா என்று நான் முடிவு செய்ய வேண்டும்" என்றான். அதற்கு அந்த இளைஞன், "எனது பெயர் ஷாங். நான் பூமியில் வாடகைக்கார் ஓட்டியாக இருந்தேன்" என்றான்.உடனே தனது கையிலிருந்த பட்டியலில் அதை சரி பார்த்த காவலாளி அந்த இளைஞனிடம் " இந்த தங்க அங்கியை எடுத்துக் கொண்டு நீ சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இளைஞனும் மகிழ்ச்சியோடு உள்ளே செல்கிறான்.அடுத்து போதகரின் முறை.அவரிடம் அவரைப் பற்றி சொல்லுமாறு காவலாளி கேட்க அவரும் தனது பெயரையும், தான் பூமியில் வருடக்கணக்காக மக்களுக்கு கடவுள் பற்றிய விஷயங்களை போதித்து வந்ததாகவும் சொல்கிறார்.அதைக் கேட்டு தனது பட்டியலில் சரி பார்க்கும் காவலாளி அவரிடம், "இந்த பருத்தி அங்கியை எடுத்துக்கொண்டு ...

ஒரு ஜென் கதை

ஜென் துறவி ஒருவர் அழகான மலையடிவாரத்தில் வசித்து வந்தார்.ஒரு நாள் மாலை அவர் வீட்டில் இல்லாதபோது திருடன் ஒருவன் அவருடைய எளிய வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சிக்கிறான்.ஆனால் அங்கு திருடுவதற்கு ஒன்றும் இல்லை.இதற்கிடையில் ஜென் துறவி வீட்டிற்கு திரும்புகிறார்.வீட்டில் திருடன் இருப்பதையும்,திருட ஒன்றும் இல்லாததால் அவன் ஏமாந்து நிற்பதையும் பார்க்கிறார்.உடனே அவர், "மகனே! நீ வெகு தூரத்தில் இருந்து என்னைத்தேடி வந்துள்ளாய்.உன்னை வெறுங்கையுடன் அனுப்புவது தவறு.அதனால் தயவுசெய்து எனது அன்பளிப்பாக இந்த உடையை எடுத்துக்கொள்" என்று சொல்லி தான் அணிந்திருந்த உடையை கழட்டி அவனிடம் கொடுக்கிறார்.திருடன் சற்று திகைத்தாலும் பிறகு சுதாரித்து அந்த துணியை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறான்.அவன் போனபிறகு நிர்வாணமாக அமர்ந்து வெளியே நிலவைப் பார்க்கும் துறவி எண்ணுகிறார், "பாவம் அவன்! அவனுக்கு பேசாமல் இந்த நிலவைக் கொடுத்து அனுப்பியிருக்கலாம்".

லியோடால்ஷ்டாய் கதை ஒன்று

சமீபத்தில் லியோடால்ஷ்டாய் கதை ஒன்று படித்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.அந்த கதையானது: காலணி செய்யும் தொழிலாளி சைமனை அவனுக்கு வரவேண்டிய பாக்கி தொகைகளை வசூலித்து வருமாறு சொல்லி அவன் மனைவி அனுப்புகிறாள்.சைமனுக்கென்று நிலமோ, வேறு சொத்துகளோ இல்லை.அவன் கடுமையாக உழைத்து தன்னுடைய குடும்பத்தை நடத்துகிறான். வழிச்செலவுக்கு என்று சிறிது தொகையை கொடுத்து , அதை பார்த்து செலவு செய்யுமாறும் , வழியில் குடித்து விடாமல் இருக்குமாறும் சொல்லி அனுப்புகிறாள்.அவனும் புறப்பட்டு செல்கிறான்.அவன் வசூலுக்காக இருவேறு கிராமங்களுக்கு செல்கிறான்.அவனுக்கு பணம் தரவேண்டிய இரண்டு வீட்டிலும் பிறகு வருமாறு சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.அதே சமயம் ஒருவீட்டில் சில செருப்புகளை அவனிடம் தந்து தைத்து தரச் சொல்கிறார்கள்.அவனும் தைத்து தருகிறான்.அதற்காக அவனுக்கு கொஞ்சம் பணம் தருகிறார்கள்.அவன் அதை வாங்கிக்கொண்டு ஊர் திரும்புகிறான்.வழியில் பயங்கர குளிர் ஆக இருக்கிறது.சிறிது வோட்கா குடித்தால் நன்றாக இருக்கும் என்று அவனுக்கு தோன்றுகிறது.ஆனால் அவன் மனைவி திட்டுவாளே என்று யோசிக்கிறான்.பிறகு அவள் கொடுத்த பணத்தில் குடிப்பது இல்லைஎன்றும், செருப...