Posts

நான் வாக்கிங் போறேன் ! நான் வாக்கிங் போறேன்

" ஆளபாரு! தொந்தியும் தொப்பையுமா!  வயித்து சைஸ குறைங்க!" - இது என் சகதர்மினி அடிக்கடி என்னை பார்த்து உதிர்க்கும் நல்வார்த்தை(?)                      இது போதாதென்று குதிகால் வலி தாங்க முடியவில்லையென்று எலும்புசிகிச்சை நிபுணரை சென்று பார்த்தேன்.அவர் காலை இங்கும் அங்கும் அமுக்கி பார்த்துவிட்டு(எனக்கு மார்க்கெட்டில் தக்காளி வாங்கும் ஞாபகம்  வந்தது), "சார்! இந்த மாத்திரை எல்லாம் சாப்பிடுங்க! நல்லா கேட்கும், ஆனா மாத்திரை சாப்பிடறது நிறுத்தன உடனே வலி வந்திடும்" என்றார்.இது என்ன கொடுமை என்று  நான் கேட்க ,"ஆமா சார் ! நீங்க கொஞ்சம் ஓவர் வெயிட், அத குறைங்க, வலி சுத்தமா நின்னுடும்" என்று திருவாய்மலர்ந்து அருளினார்.                       சரி, இனி கொஞ்சம் உணவு கட்டுப்பாடு அவசியம் என்று வழக்கமாய் மாலைநேரங்களில் அலுவலகத்துக்கு வெளியே கடையில் பஜ்ஜி போண்டா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வெறும் இஞ்சி டீ மட்டும் குடிக்க ஆரம்பித்தேன்.சில நேரங்களில் டீயில் இஞ்சி ஜாஸ்தி ஆகி , அதை குடிக்கும...

இமயத்து ஆசான்கள்

Image
         இந்த புத்தகத்தை சென்னையின் பிரபல ஆன்மீக பொருட்கள் விற்பனை நிலையத்தில்  வாங்கி படித்தேன்.சுவாமி ராமா என்பவரின் வாழ்க்கை சரிதம்(சுய சரிதம்).        இமயமலையில் பிறந்து வாழ்ந்த இந்த  ஸ்வாமியின் வரலாறு மிக சுவாரசியமாக இருந்தது.மிக சிறந்த குருநாதர் வாய்க்கப்பெற்ற இவர் உண்மையில் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட ஆத்மா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.தனது ஆன்மீக வாழ்க்கையில் தனக்கு உதவிய, வழிகாட்டிய அனைத்து குருமார்களை பற்றியும் நன்றியுடன் நினைவு கூர்ந்து எழுதியுள்ளார்.மனிதர்கள் எளிதில் அடைய முடியாத இமயத்தின் ரகசியமான பல இடங்களில் சுற்றி திரிந்து ஆன்மீக அனுபூதி அடைந்துள்ளார்.        இறை தாகம் கொண்டவர்கள் அவசியம் படித்து பாருங்கள்,பயனடைவீர்கள்.

வெண்பா

       நான் முகநூலில் உறுப்பினர் கிடையாது.அது ஒரு நேரம்கொல்லி என்பது எனது அபிப்ராயம்.எனது தந்தையார் அதன் ஆக்ட்டிவ் உறுப்பினர்.ஏதாவது ஆன்மீக குழுக்கள் அல்லது கவிதை குழுக்களில் சேர்ந்து எதையாவது பதிவிட்டுக்குக் கொண்டிருப்பார்.ஒரு கவிதை குழுவில் அவ்வப்போது ஏதேனும்  தலைப்பு கொடுத்து அதற்கு ஏற்ற கவிதைகளை எழுதி பதிவிட சொல்வார்கள்.இவரும் உடனே எதையாவது யோசித்து எழுதி பதிவிடுவார்.      சமீபத்தில் செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடியும் வெண்பா எழுத சொன்னார்களாம்.இதை கேட்டவுடன் எனது மூளைக்குள் ஒரு நமைச்சல்.நானும் ஒரு காலத்தில் கவிதை எழுதியவன் என்பதால் இயல்பாகவே இதை ஒரு சவாலாக ஏற்று நாம் ஏன் முயற்சி செய்ய கூடாது என்று தோன்றியது. அதன் பக்க விளைவே இந்த வெண்பா.படித்துவிட்டு இது பக்க விளைவா இல்லை பக்கா விளைவா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். செருப்பு தேய நடந்து தேடி நல்ல பருப்பு வாங்கி வந்தால் - மனைவி இருப்பதில் மட்டம் இதுதான் என்கிறாள் கேட்டேன் அதை விளக்குமாறு.

நாட்டுநடப்பு

                 முன்பெல்லாம் காலம் ரொம்ப கெட்டுபோச்சு என்று யாராவது அங்கலாய்த்தால் எனக்கு எரிச்சல் வரும்.ஆனால் இன்று நானே அதை அடிக்கடி சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை படிக்கும் பொது நிறைய நேரங்களில் மனம் கனத்துப்போகிறது.                   பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இன்று மிகவும் மலிந்துவிட்டன.பெண்களை தெய்வமாக கொண்டாடும் ஒரு தேசத்தில் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஒரு சோகமான நகைமுரண். டிவி,இணையம் போன்ற ஊடகங்கள் இன்று யாவர்க்கும் எளிதாக கிடைக்கின்றன.பருவ வயதினரை பாதை மாறச்செய்யும் எல்லா விஷயங்களும் இவற்றில் உண்டு.பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்த்து பார்த்து வளர்க்க வேண்டியிருக்கிறது.                  சமீபத்தில்தான் கம்பர் எழுதிய இந்த செய்யுளை படித்தேன். பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான் இதன் விளக்கமாவது: சிவபெருமான் தனது மனைவி பார்வதியை த...

சிகையலங்கார கடையால் வந்த சிக்கல்!

"வீட்டுக்கு பக்கத்துல ஒரு புது சலூன் வந்தாலும் வந்தது , ஒங்க ஆட்டம் தாங்க முடியல.அத பண்ரேன்,இத பண்ரேன்னு ஒரே காபரா!" இது எனது அருமை தர்மபத்தினியின்(அதென்ன தர்மபத்தினி? புருசன தர்ம அடி அடிக்கறவங்களா?) குமுறல். விசயம் ஒன்றுமில்லை.எனது வீட்டின் அருகே புதிதாக ஒரு Men's Saloon and Spa ஆரம்பித்தார்கள்.சரி , என்னதான் பண்ராங்கனு பாப்பமே என்று ஒருநாள் சென்றேன்.பயபுள்ள கடய பெரிக்கி, தொடச்சு சுத்தமா வைத்திருந்தான்.அதே சமயம் கடையில் ஒருவரும் இல்லை , அந்த கடைக்கார பையனைத் தவிர.வழக்கமாக நான் செல்லும் கடையில் ஒரே கூட்டமாக இருக்கும்.சலூன்காரருக்கு போன் செய்தால் , "அண்ணாச்சி! ஒரு ரெண்டு மணிநேரம் கழிச்சு வாங்க!" என்பார்.அதனால் எனக்கு இன்ப அதிர்ச்சி.பிறகு தான் அதற்கான காரணம் தெரிந்தது.கட்டிங்,சேவிங் எல்லாவற்றுக்கும் இங்கே கட்டணம் அதிகம்.இருந்தாலும் பரவாயில்லை.கடை சுத்தமாக இருக்கிறது, கூட்டமும் இல்லை என்று அங்கேயே கட்டிங்,சேவிங் செய்து கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.அதோடு நின்றிருந்தால் எனது மனைவியின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கமாட்டேன்.பொடுகு நீக்க சிகிச்சை எடுக்கிறேன் பேர்வழி என்று கா...

கா.மாவிலிருந்து, செ.மாவிற்கு ஒரு பயணம்!

எனது மச்சினன் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் அப்படியே எனது அக்கா வீட்டிற்கும் செல்வது எங்களது வழக்கம்.காரணம் இரண்டு வீடுகளும் ஒரே பகுதியில் உள்ளன.சென்றமுறை அவ்வாறு செல்லும்போது , வழியில் சுவற்றில் தெருவின் பெயர் எழுதி , கீழே செ.மா என்று போட்டிருந்தது,எனது மனைவி அதை பார்த்துவிட்டு "அதென்னங்க! செ.மா?" என்று கேட்டாள். நான் உடனே எனது கிட்னியை கசக்கிபிழிந்து "சென்னை மாவட்டம்" என்றேன்.உடனே அவள் , "அப்படின்னா நாம கா.மாவில் இருக்கிறோமா?" என்றால்."என்னது? கா.மாவா? பேரே செரியில்லயே" என்றேன் நான்.அவள் தெளிவாக, "ஆமா! நம்ம ஏரியா காஞ்சிபுரம் மாவட்டம் தானே?" என்றாள்.இருவரும் சிரித்தோம்.அதன்பிறகு எப்போது எனது அக்கா வீட்டிற்கு சென்றாலும்,"கா.மாவிலிருந்து, செ.மாவிற்கு ஒரு பயணம்" என்று விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சி அறிவிப்பு போல சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவு!

கடும் பணிச்சுமையின் காரணமாக ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.இன்றாவது நேரம் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.வாழ்க்கை வழக்கம்போல் செல்கிறது.பெரும்பாலான நேரங்களில் என்ன செய்கிறோம்,வாழ்க்கையின் லட்சியம் என்ன என்று நினைப்பேன்.ஏதோ பொழுது விடிகிறது,அலுவலகம் செல்கிறோம்,வீடு திரும்புகிறோம்,உறங்குகிறோம், அடுத்த நாள் இதே கதைதான்.(மறுபடியும் மொதல்ல இருந்தா?) என்னவோ போங்க.வாழ்வின் மீதான தீரா காதல் மனிதர்களை தொடர்ந்து இயங்க வைக்கிறது.இல்லையென்றால் அவனவன் சலித்துபோய் "போங்கடா! இந்த ஆட்டைக்கு நான் வரல!" என்று ஓடி விடுவான்.கும்பமேளாவில் குவியும் சாமியார்களை பார்க்கும் போது எல்லாம் எனக்கு இது தான் தோன்றும்.ஒருமுறையாவது காசி, கங்கை என்று கண்ணால் பார்க்க வேண்டும் என்று ஆசை.எனது நண்பன் ஒருவன் "வைஷ்ணோதேவி போய்வரலாம்" என்று அழைக்கிறான்.அதற்கு இன்னும் வேளை வரவில்லை.

The Way Back - ஒரு பார்வை

                     சென்ற சனிக்கிழமை , "The Way Back" என்ற ஆங்கில படத்திற்கு நானும் , எனது அலுவலக நண்பர்களும் சென்றிருந்தோம்.வழக்கம் போல எனக்கு பிடித்த ஐநாக்ஸ் திரையரங்கு தான்.சிட்டி சென்டரில் உள்ள லேண்ட்மார்க் புத்தக கடைக்காகவே நான் எப்போதும் ஐநாக்சை தேர்வு செய்வேன்.படம் ஆரம்பிப்பதற்கு முன் சிறிது நேரம் லேண்ட்மார்க்கில் சுற்றலாம்.நிறைய தமிழ் , ஆங்கில புத்தகங்களை வாங்கலாம்.சரி விசயத்திற்கு வருவோம்.                      நாங்கள் உள்ளே நுழையும்போது விளம்பரம்  ஓடிக் கொண்டிருந்தது.எல்லாமே செம மொக்க விளம்பரங்கள். அவற்றை பார்த்தால், அந்த பொருள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவனும் மனம் மாறி விடுவான்.நல்ல வேலை இன்னும்  சற்று முன்பாக வரவில்லை என்று நினைத்துக் கொண்டேன். ஒரு வழியாக படம் ஆரம்பித்தது.ஆரம்பித்து ஒரு 15 நிமிடத்தில் எனக்கு அருகில் இருந்து குறட்டை சத்தம்.திரும்பி பார்த்தால் , எனது நண்பர் சின்னா நன்கு தூங்கி கொண்டிருந்த...

கார்ன் பிளேக் சாப்பிடுவது லிவருக்கு நல்லது!!!

          இது என்ன புது கதை என்கிறீர்களா? பிறகு, வேற என்ன செய்வது? "காலைல வெறும் கார்ன் ப்ளேக்சா சாப்டர?" என்று கேள்வி கேட்கும் நபர்களை இப்படிதான் சமாளிக்க வேண்டியுள்ளது.           சின்ன வயதில் டி.வி விளம்பரம் பார்த்து , ஆசைப்பட்டு சீரியல்(மெகா சீரியல் இல்லை, சாப்பிடும் சீரியல்) வாங்கி நன்றாக அமுக்குவேன்.அந்த வயதில் அது ஒரு சாகசம்."நான் இன்னைக்கு கார்ன் பிளேக்ஸ் சாப்டனே!" என்று பள்ளியில் படம் போட உதவும். ஆனால், இந்த காலம் போன காலத்தில்(ஹலோ! நான் ஒன்றும் "பெருசு" இல்லை.இருபத்தெட்டு வயது தான் ஆகறது) அதை காலை உணவாக உண்பது எனக்கு அவ்வளவு பிடித்தமாக இல்லை.இருந்தாலும் ஆண்டவன் கொடுத்த இந்த சின்ன வயிற்றை(யாருப்பா அங்க சிரிக்கறது? பிச்சுபுடுவன் பிச்சு, ராஸ்கல்) நிரப்ப வேண்டியுள்ளதே.            சமையல் செய்ய கற்றுக் கொள்ளாமல் போனோமே என்று என்னை நானே திட்டி கொண்டிருக்கிறேன். இதில் எனது மச்சினன் தொல்லை வேறு.காலையில் அமெரிக்காவில் இருந்து அழைத்து, "பாவா! நேத்து ந...

அமெரிக்காவிற்கு பஸ்சில் போலாம்!

                   பிப்ரவரி முதல்வாரம் எனது சின்ன மச்சினன் அமெரிக்கா சென்றுவிட்டான் .அவன் சென்ற பிறகு எனது மாமியார் வீட்டில் நடந்த காமெடி கொஞ்ச ,நஞ்சம் இல்லை. எனது மாமியார் வீட்டின் மேல்மாடியில் ஒரு குடும்பம் வாடகைக்கு இருக்கிறது. அந்த வீட்டு அம்மா , எனது மனைவியிடம் "அமெரிக்காவிற்கு பஸ்சில் போனால் எவ்வளவு நாளாகும் ?" என்று முகத்தை சீரியசாக வைத்து கொண்டு கேட்க , எனது மனைவியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அமரிக்காவிற்கு பஸ்சில் எல்லாம் போக முடியாது , விமானத்தில் தான் போக முடியும் என்று அவர்களுக்கு விளக்கி சொல்லியிருக்கிறாள் .                   இதைவிட பெரிய கூத்து ஒன்று நடந்தது.எனது மாமியார் வீட்டின் அருகே ஒரு காய்கறி கடை இருக்கிறது.அந்த கடை முதலாளிக்கு பள்ளி செல்லும் இரண்டு  சின்ன பையன்கள் இருக்கிறார்கள்.எனது மச்சினன் அமெரிக்கா சென்ற பிறகு அவர்கள் இருவரும் எனது மனைவியிடம் அடிக்கடி "நிலவில் இப்போது பகலா,இரவா? நிலவில் ரொம்ப குளிருமா?" என்றெல்லாம் கேட்ட...

இது அப்ரைசல் நேரம்!!!

               அப்ரைசல் என்கிற சம்பள உயர்வு,  பணியாளர்களை  படாதபாடு  படுத்துகிறது. வருடத்திற்கு ஒருமுறை  சம்பள உயர்வளிக்கும் நிறுவனம் என்றால் தப்பித்தோம். சில  நிறுவனங்களில்  இரண்டுமுறை  உயர்த்துவார்கள். அந்த நிறுவன பணியாளர் பாடு திண்டாட்டம்தான். ஏன் என்றால் இந்த அப்ரைசல் என்பது சாதாரண விஷயம் இல்லை. சென்ற வருடம் நீ என்ன சாதித்து கிழித்தாய் என்பதை நாசுக்கான வார்த்தைகளில் கேட்பார்கள்.நாம் அதற்கு பக்கம், பக்கமாக விளக்கம் அளிக்க வேண்டும். நாம் ஒன்றும் ஒருப்படியாக கிழிக்காவிட்டாலும் சும்மா அள்ளி விடவேண்டும் .அப்போதுதான் எட்டு சதவீதமோ, பத்து சதவீதமோ உயர்வு இருக்கும். இல்லையென்றால் "உனக்கு இப்போது கொடுப்பதே ஜாஸ்தி, கொய்யால! கொடுக்கறது வாங்கிட்டு கம்னு கெட" என்று சொல்லிவிடுவார்கள்("நாசுக்கான வார்த்தைகளில்"). எனவே சனி, ஞாயிறு கிழமைகளில் கூட ரூம் போட்டு யோசித்தாவது எதையாவது  அந்த படிவத்தில்(எல்லாமே online தான்)  நிரப்ப வேண்டும்.   ...

ஒருப்படியாக கழிந்த சென்ற வாரம்!!!

சென்ற வாரத்தில் நான் செய்த சில வேலைகள் எனக்கு என மனைவியிடம் நல்ல பெயர் வாங்கித் தந்தன.(உஷ்ஷ்! இப்பவே கண்ண கட்டுதே). வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜூலை பதினைந்து கடைசி தேதி என்று எங்கள் குடியிருப்பின் தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டியிருந்தார்கள். ஆஹா! நமக்கும் ஒரு விடிவு காலம் வந்துவிட்டது. ஒரு உருப்படியான முகவரி சான்று கிடைத்துவிடும் என்று எனக்கு சந்தோசம்.அதற்கான விண்ணப்பங்கள் எங்கள் குடியிருப்பின் காவலாளியிடம் இருப்பதையும் தகவல் பலகை சொல்லியது. குறைந்த விண்ணப்பங்களே இருப்பதால் உங்கள் பிரதிக்கு முந்துங்கள் என்று உப தகவலை குடியிருப்பின் நலச்சங்க தலைவர் பின்குறிப்பாக எழுதியிருந்தார்.அதனால் உடனே காவலாளியை தேடி, ஓடி கண்டுபிடித்தேன். இரண்டு விண்ணப்பங்களை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்ட பிறகு தான் எனக்கு நிம்மதி வந்தது. அவரிடமே அதை பூர்த்தி செய்து எங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது அவர் இரண்டு, மூன்று பேருந்து நிறுத்தங்கள் தள்ளி ஒரு சந்தில் இருக்கும் பள்ளியில் கொடுக்க வேண்டும் என்றார். ...

ஆன்மிக சொற்பொழிவு!!!

கடும் பணிச் சுமையின் காரணமாக பதிவுகள் இடுவதில் ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.இன்று எப்படியாது ஒரு பதிவாவது இட வேண்டும் என்று எல்லாம் வல்ல வயலூர் முருகப் பெருமானை வேண்டி தொடங்குகிறேன்.இன்று வாரியார் சுவாமிகளின், வள்ளலார் பற்றிய சொற்பொழிவை கணினியில் கேட்டதன் விளைவு இது. வாரியார் சுவாமிகளுக்கு நிகர் அவர் தான். என்ன ஒரு சரளமான தமிழ், என்ன ஒரு ஞாபக சக்தி!!! "இன்று காலை என்ன சாப்பிட்டாய் ?" என்று யாராவது கேட்டால் நான் ஒரு ஐந்து நிமிடமாவது யோசிப்பேன். சுவாமிகள் எந்த காலத்திலோ படித்த, கேட்ட பாடல்களை சுருதி பிசகாமல், வார்த்தை மாறாமல் அழகாக பாடுகிறார். இடையிடையே மெல்லிய நகைச்சுவை வேறு. உபன்யாசம் செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதி சொல்ல வந்ததை சுருக்கமாக, தெளிவாக, சுவையாக சொல்லும் கலை. இவை அனைத்தும் சுவாமிகளுக்கு உண்டு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனது பள்ளி நாட்களில் புலவர் கீரன் அவர்களது சொற்பொழிவுகளை ஒலி நாடாவில் கேட்டிருக்கிறேன்.அவருடைய பேச்சும் மிக அருமையாக இருக்கும். அவருடைய பெரிய பலம் வெண்கல மணி ப...

மகாபாரதத்தில் உள்ள செய்தி

மகாபாரதத்தில் நிறைய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. யாரையும் இழிவாக கருதி அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை பின்வரும் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. பாரதப்போர் நடந்து கொண்டிருக்கிறது.அர்ஜுனனை கொல்ல கர்ணன் நாகாஸ்திரத்தை நிச்சயம் பயன்படுத்துவான் என்று கிருஷ்ணனுக்கு தெரியும்.அதனால் அதற்கு முன்பே அவர் குந்தியிடம் கர்ணன் பாண்டவர்களில் மூத்தவன் என்பதை சொல்லிவிடுகிறார்.அது மட்டுமல்ல இதை கர்ணனிடம் போய் சொல்லுமாறும், கூடவே அவனை கவுரவர்களை விட்டு பிரிந்து பாண்டவர் அணியில் சேருமாறு கேட்கவும் சொல்கிறார். அதற்கு அவன் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருதடவைக்கு மேல் பிரயோகிக்காமல் இருக்க அவனிடம் வரம் வாங்குமாறும் கூறுகிறார்.குந்தியும் உடனே கர்ணனை சென்று பார்த்து தான்தான் அவன் தாய் என்று சொல்லி அழுகிறாள்.கர்ணன் இதைக் கேட்டு மகிழ்கிறான்.பிறகு குந்தி அவனை பாண்டவர் அணியில் சேர நிர்பந்திக்கிறாள். அதற்கு கர்ணன் உறுதியாக மறுத்துவிடுகிறான்.அதனால் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருதடவைக்கு மேல் பிரயோகிக்காமல் இருக்க வேண்டும் என்று அவனிடம் குந்தி கேட்க அவனு...

ஓடுங்க!!! திங்கள் கிழமை வருது!!!

சனி, ஞாயிறு கிழமைகள் வருவதும் தெரிவதில்லை. போவதும் தெரிவதில்லை. இந்த இரண்டு நாட்களுக்காக நாம் ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.இருந்தும் ஒரு புண்ணியமும் இல்லை.வெள்ளிக்கிழமை பொழுது விடியும்போதே ஒரே குஜாலாக இருக்கும்.பொழுதுபோய் மாலை ஆனால் இன்னும் சந்தோசம். சினிமா போபவர்கள், நண்பர்களை பார்க்க போபவர்கள் , வெளியே சுற்றுபவர்கள் என்று ஒரே குஷி தான்.சனிக்கிழமையும் சந்தோசமாக போகும். ஞாயிறு வந்தவுடன் மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நினைப்பே கடுப்பைக் கிளப்பும். ஞாயிறு மாலை வந்தால் கடுப்பு இன்னும் கூடும். திங்கள் காலை கேட்கவே வேண்டாம். ஒரு லிட்டர் விளக்கெண்ணை குடித்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு அலுவலகம் கிளம்ப வேண்டியது தான். பள்ளிப் பருவத்தில் தான் திங்கள் கிழமை வில்லனாக இருந்தது என்றால் இப்போதும் அப்படிதான் இருக்கிறது. என் மனைவியை சென்ற திங்கள் கிழமை அலுவலகம் அனுப்ப அவர்கள் அலுவலக பேருந்து வழக்கமாக நிற்கும் இடத்தில் நின்றிருந்தேன். அந்த இடத்தில் ஒரு சிறுவர் கூட்டம். ஏதோ ஒரு பள்ளி பேருந்திற்காக அவர்கள் தத்தமது பெற்றோருடன் நின்றிருந்தனர். அதில் ஒரு சிறுமி அழு அழு என்று அழுது தீர்த...

எருமைச்சாணி வைத்தியம்

ஒரு ஊரில் ஒரு வைத்தியர் இருந்தார். அவர் ஒருவர் தான் அந்த சுற்றுவட்டாரத்திற்கே ஒரே வைத்தியர் என்பதால் எப்போதும் அவரைக் காண மக்கள் வந்த வண்ணம் இருப்பார் .அவருக்கு இதனால் நல்ல வருமானம்.விதி யாரை விட்டது. வைத்தியருக்கு அது ஒரு ஆப்பு வைத்தது. அது என்னவென்றால் வெளியூரில் இருந்து அந்த ஊருக்கு ஒரு புது வைத்தியன் வந்து சேர்ந்தான். வந்த கொஞ்ச நாளிலேயே கைராசிக்காரன்,கெட்டிக்காரன் ,எந்த வியாதியையும் குணப்படுத்துவான் என பெயர் வாங்கிவிட்டான் அந்த புது வைத்தியன். இதனால் ஊர் மக்கள் எல்லோரும் அவனிடமே சென்று வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார்கள் .நம்ம பழைய வைத்தியனுக்கு(இனிமேல் புது வைத்தியனை பு.வை என்றும் பழைய வைத்தியனை ப.வை என்றும் சுருக்கமாக சொல்கிறேன்) இதனால் டப்பா டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டது. இப்படியே போனால் டேராவை தூக்கிக்கொண்டு வேற ஊர் தான் பார்க்கணும் அதனால் இதற்கு ஒரு முடிவு கட்டுவோம் என்று நம்ம ப.வை கிளம்பினார். கிளம்பியவர் நேரே பு.வை வீட்டிற்கு சென்றார்.பு.வியிடம் "எனக்கு ஒரு விசித்திர வியாதி உள்ளது. நீங்கள் தான் எப்படியாவது அதை குண...

தேர்தல் திருவிழா!

இந்த தேர்தல் ஒரே காமெடி தான் போங்கள்.இந்த அணியில் இருப்பவர் அந்த அணி மாறுவதும், நேற்று வரை கொஞ்சியவர்கள் இன்று ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசுவதும் , ஆகா! நல்ல பொழுதுபோக்கு.இந்த அணி, அந்த அணி என்று ஒரு அணிக்கும் மத்தியில் பெரும்பான்மை கிடைக்காது என்று வேறு அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்(தேர்தல் பார்வையாளர்கள் சரி , இது என்ன அரசியல் பார்வையாளர்கள்?) இரண்டு அணி போதாது என்று ஒரு மூன்றாவது அணி.இந்த மூன்றாவது அணி பிடிக்காமல் ஒரு நான்காவது அணி.அப்பப்பா! ஒரே தலை சுற்றல்.நான்கு கட்ட தேர்தல் முடிந்துவிட்டது.இன்னும் ஒரு கட்ட தேர்தல் தான் பாக்கி.அடுத்த வெள்ளியன்று தெரிந்துவிடும் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்று.அதுவரை ஒரு பரபரப்பு, ஒரு விறுவிறுப்பு என நாட்கள் கழிகின்றன.யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு ஒன்றும் ஒருப்படியாக செய்யப் போவதில்லை.இதற்கு கோடிக்கணக்கில் செலவு நடக்கிறது.இந்த 49-0 வை தேர்தல் எந்திரத்தில் சேர்த்தால் நிறைய பேர் அதைத்தான் தேர்வு செய்வார்கள் என்பது என் கணிப்பு.பார்ப்போம், அடுத்த ஆட்சி யார் கையில் என்று.

ஒரு ஜென் கவிதை!!!

பட்டாம்பூச்சிகள் அன்போடு தொடர்கின்றன மலர்வளையம் சவப்பெட்டியின் மீது கிடத்தப்பட்டு இருக்கிறது!!! படித்துவிட்டு சிறிது நேரம் அப்படியே பிரமித்து நின்றேன்.என்ன ஒரு அபாரமான கவிதை!

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

குருசேத்திர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் தீவிரமாய் போர் செய்து கொண்டிருக்கிறார்கள். கவுரவர் அணியில் இருந்து துரோணர் உக்கரமாய் போர் செய்கிறார். துரோணர் சிறந்த வீரர். அவரை போரிட்டு வெல்ல முடியாது என்பது பகவான் கிருஷ்ணனுக்கு தெரியும்.எனவே துரோணரை தந்திரமாக வீழ்த்த எண்ணுகிறார். துரோணரின் ஒரே பலவீனம் அவரது மகன் அஸ்வத்தாமன் மீது அவருக்குள்ள பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் துரோணர் தவித்துப் போய்விடுவார் என்று கணக்கு போடுகிறான் கிருஷ்ணன். உடனே கிருஷ்ணன் தருமரை அழைத்து சொல்கிறான் " தருமா! துரோணரை போரில் வீழ்த்த உங்களால் இயலாது. எனவே நான் ஒரு உபாயம் சொல்கிறேன். அதன்படி செய்" என்கிறான். தருமர் உடனே ,"சொல் கிருஷ்ணா" என்கிறார்.கிருஷ்ணன் சொல்கிறான் " தருமா! துரோணருக்கு தன் மகன் அஸ்வத்தாமன் மீது அளவு கடந்த பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் இவர் துடித்துப் போய்விடுவார்.அந்த நேரத்தில் நாம் அவரை வீழ்த்திவிடலாம். அதனால் நீ இப்போது "அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்" என்று சத்தம் போட்டு சொல்.அதை கேட்டவுடன் அவர் போரை நிறுத்திவிடுவார். பிறகு அ...

சென்னையில் ஒரு மழைக்காலம்

இந்த வருட மழை சீசன் ரொம்பவே படுத்திவிட்டது. இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் சென்னை-வேளச்சேரியில் தான் வசித்து வருகிறேன். ஆனால் இந்த வருடம்தான் கன மழை. நிஷா செய்த அட்டகாசம் கொஞ்ச, நஞ்சம் இல்லை. நான் நவம்பர் இருபத்தேழாம் தேதி அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது எங்கள் வீட்டை சுற்றி முழங்கால் அளவு தண்ணீர் இருந்தது. நான் தூங்கி எழுந்து மறுநாள் பார்த்தால் இடுப்பளவு தண்ணீர். பாரதி பாட்டை மாற்றி " எங்கெங்கு காணினும் தண்ணியடா" என்று பாடினேன். பிறகு மீண்டும் தூங்கிவிட்டேன்.திடீரென்று வெளியில் "போட்! போட்!" என்று யாரோ கத்தும் சத்தம் கேட்டது.நான் உடனே, "பாரடா இந்த அநியாயத்தை! இந்த மழையில் எவனோ குழந்தைகள் விளையாட போட் பொம்மை விற்றுக் கொண்டிருக்கிறான்" என்று நினைத்து , யார் அந்த மனிதன் என்று எட்டிப் பார்த்தால் பெரிய கட்டுமரம் ஒன்று எங்கள் வீதியில் மிதந்து செல்கிறது. எங்கள் வீட்டு ஓனரைக் கூப்பிட்டு "இது என்ன சார்?" என்றேன். அவர் ரொம்ப நிதானமாக "நாம இப்ப வெளில போக முடியாது சார். ஏன்னா , இந்த தண்ணியில பா...